Customer Care: Hello Sir நான் Swiss பேங்க்ல இருந்து பேசுறேன் ஒரு 5 minutes உங்க கூட பேசலாமா ?
சொக்கலிங்கம் : சாரி மேடம் wrong number.
Customer Care: இல்ல சார் நான் உங்க கூட தான் பேசணும். நீங்க தானே சொக்கலிங்கம்.
சொக்கலிங்கம் :ஆமா . நான்தான் சொக்கலிங்கம் ஆனா நீங்க நினைக்கிற சொக்கலிங்கம் நான் இல்ல.
Customer Care: Sir ...Sir ...வச்சுடாதிங்க. நீங்க சொக்கலிங்கம், ஊர் தஞ்சாவூர் பக்கத்துல உள்ள ஒரத்தநாடு சரியா?
சொக்கலிங்கம் : ஆமா நான் தான் . ஆனா நீங்க எங்கிருந்து பேசுறேன்னு சொல்றிங்க.
Customer Care: சார் என் பேரு அஞ்சலை நான் Swiss பேங்க்ல இருந்து பேசுறேன்.
சொக்கலிங்கம் : Swiss பேங்க் na, எங்க அரசியல்வாதிகள் எல்லாம் அவங்க கருப்பு பணத்தைப் பதுக்கி வச்சிருப்பாங்களே அந்த பேங்கா?
Customer Care: ஆமா சார்.
சொக்கலிங்கம் : அது வெளிநாட்டு பேங்குல்ல , நீ நல்லா தமிழ் பேசுற.
Customer Care: ஆமா சார் நான் வெளிநாட்டு பொண்ணுதான். ஆனா எனக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்னு எல்லா இந்திய மொழிகளும் நல்லா தெரியும். எங்களுக்கு இந்தியலேருந்துதான் கஸ்டமர்ஸ் அதிகம். அவங்க கூட பேசி பேசி எனக்கு இந்த மொழிகள் எல்லாம் அத்துபடி ஆச்சு.
சொக்கலிங்கம் : ஆமா உன் பேரு என்ன சொன்ன ?
Customer Care:என்னோட உண்மையான பேரு ஏஞ்சலினா ஜூலி. ஆனா நான் அதிகமா தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களோட பேசுறதால அஞ்சலன்னு மாத்திக்கிட்டேன்.
சொக்கலிங்கம் : சரி எனக்கு எதுக்கு கால் பண்ணிங்க?
Customer Care:சார் இப்போ எங்க பேங்க்ல ஒரு offer போகுது . அதாவது இன்னும் 10 நாளுக்குள்ள Account open பண்ணா, நாங்க 10% வட்டி விகிதம் தர்றோம். அது மட்டுமில்ல minimum balance 20 கோடியில் இருந்து 2கோடியா குறைச்சிருக்கோம். இந்த நல்ல chance மிஸ் பண்ணிடாதிங்க அப்புறம் பீல் பண்ணுவீங்க.
சொக்கலிங்கம் : என்னம்மா எங்க இமான் அண்ணாச்சி மாதிரி பேசுற .
Customer Care: நான் தமிழ் கத்துகிறதுக்கு சன் டிவியில அவரோட நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்திருக்கேன்.
சொக்கலிங்கம் : அதுசரி ....நீ கோடிக்கணக்குல பேசுற....ஆனா நான் ஒரு சாதாரண விவசாயிம்மா..என்கிட்டே ஏது அவ்வளவு பணம் பேங்க்ல போடுறதுக்கு.
Customer Care: இல்ல சார் , எங்க பேங்க்ல உங்க ஊர் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், சாமியார்கள், கிரிக்கெட் வீரட்கள் னு எல்லாரும் அக்கௌன்ட் வச்சிருக்காங்க. ஆனா இன்னும் விவசாயிங்க மட்டும் தான் அக்கௌன்ட் ஓபன் பண்ணல. அதான் இனி எங்க அடுத்த TARGET உங்க ஊர் விவசாயிங்க தான்.
சொக்கலிங்கம் : நீ சொல்ற அந்த எல்லோரும் வருமான வரி கட்ட பயந்து தான் கருப்பு பணத்தை எல்லாம் உங்க பேங்க்ல போட்டு வச்சிருக்காங்க. ஆனா எங்களுக்கு தான் வருமானமே இல்லையே. நாங்க எங்க கோடிக்கணக்குல போடுறது. நாங்களே எங்க ஊர் பேங்குல வாங்குன கடனுக்கு வட்டி கட்ட முடியாம செத்துகுட்டு இருக்கோம்.
Customer Care:என்ன சார் இப்படி சொல்றிங்க . தஞ்சாவூர் ஒரு நெற்களஞ்சியம், விவசாய சொர்க்க பூமின்னு படிச்சிருக்கேன் . நீங்க என்னன்னா இப்படி சொல்றிங்க.
சொக்கலிங்கம் : என்னம்மா சொன்ன இன்னொரு வாட்டி சொல்லு
Customer Care: தஞ்சாவூர் ஒரு நெற்களஞ்சியம், விவசாய சொர்க்க பூமி
சொக்கலிங்கம் : இந்த வார்த்தை எல்லாம் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு. எங்க முன்னோர்கள் எல்லாம் அப்படிதான் இருந்திருக்காங்க . அப்பல்லாம் யாராச்சும் சாப்பிட கடைல அரிசி வாங்குனா அவங்கள கேவலமா பார்ப்போம். ஆனா இப்போ அரசாங்கம் இலவசம்னு கொடுக்கிற அந்த நாத்தம் புடிச்ச அரிசிய வாங்க போயி வரிசையில நிற்கிறோம் . சரி அத விடும்மா .
Customer Care: என்ன சார் இப்படி பேசுறிங்க . இதெல்லாம் உங்க தலைவர்கள் கண்டுக்க மாட்டாங்களா . நீங்க முறையிட மாட்டிங்களா .
சொக்கலிங்கம் : எங்க தலைவர்கள் எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க . இப்படி யாராச்சு ஒன்னு கூடி இந்த மாதிரி கேள்வி கேற்றுவாங்கன்னு தெரிஞ்சு தான் ஆளுக்கொரு கட்சி, டிவி ன்னு ஆரம்பிச்சு மக்களுக்குள்ளேயே சண்டைய மூட்டி விட்டு பல பிரிவுகளாக பிரிச்சி வச்சுருக்காங்க. அந்த சண்டையில அவங்க குளிர் காயுறாங்க. எங்க உழைப்பை எல்லாம் உறிஞ்சி உங்க ஊர்ல கொண்டு வந்து கொட்டுறாங்க. இங்க தலைவருக்காக தீக்குளிக்க ஆயிரம் தொண்டர்கள் இருக்காங்க . ஆனா அந்த தொண்டர்கள் குடும்பத்த பார்த்துக்க கூட ஒரு தலைவனும் இல்ல.
Customer Care: நீங்க சொல்றத பார்த்தா இந்தியா ஒரு ஏழை நாடுன்னு தோணுது. ஆனா எங்க பேங்க் ல இருக்கிற வாடிக்கையாளர்கள் அதிகம் இந்தியகாரங்க தான் . அதே போல அதிக பணம் டெபாசிட் பண்ணி இருக்கிறதும் இந்தியர்கள் தான்.
சொக்கலிங்கம் : அது எல்லாமே எங்க ரத்தத்தை உறிஞ்சி எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம்தான்.சொல்லபோன உங்க பேங்க் ல Indirecta நானும் ஒரு பங்குதாரர்தான் . அதனால நீங்க என்ன பன்றிங்கன்னா என் பேருல அக்கௌன்ட் ஓபன் பண்றதுக்கு பதிலா ஒரு விவசாயக் கடன் போட்டுத் தந்தா உங்கள சாகுற வரைக்கும் எங்க குடும்பம் கடவுளா கும்பிடுவோம்.
Customer Care: (எதிர் முனை துண்டிக்கபடுகிறது )
சொக்கலிங்கம் : போடி போ ...இதெல்லாம் நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்துட்டோம் .

No comments:
Post a Comment