Sunday, March 23, 2014

ஓட்டுக்கு பணம் வாங்குவோம்.

இப்பல்லாம் எல்லாரும் எதுக்கு தேர்தல்ல  நிற்கிறாங்க ...

1) நல்லா  சொத்து சேர்க்க
2) சொத்து இருக்கிறவங்க பதவி ஆசைக்கு
3) அப்பா ஓய்வு பெற்றவுடன் மகன்
4) கண்டிப்பா மக்களுக்கு நல்லது செய்றதுக்கு இல்ல

சரி இவங்க எல்லாம் தேர்தல் நேரத்துல யாரும் இவங்க நல்ல பெயர வச்சோ அல்லது அவர்களுடைய பின்புலத்தை வச்சோ அல்லது மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளை சொல்லியோ ஓட்டு கேட்க வருவதில்லை.

பணம், பணம் மற்றும் பணம். இது தான் அவர்களது மூலதனம். சொல்லப் போனால் இதுவும் ஒரு இன்வெஸ்ட்மென்ட் தான். சின்ன கல்லு பெத்த லாபம்.

இவங்க தேர்தல் நேரத்துல செலவழிக்கிற பணம் நல்ல வழியில் இருக்கா ? அதுவும் இல்ல.
குடிமகன் களுக்கு நல்லா வாங்கி கொடுத்து அவங்க வீட்ல நிம்மதி குலைப்பாங்க.

கண்டிப்பா இனி ஜெயிக்கிற யாரும் மக்களுக்கு செய்யணும்கிற ஆர்வமே இருக்காது.

அதனால ஊராட்சி மன்ற தலைவர்  பதவிக்கு யாரும் நின்னா ஒரு நல்ல தொகையா (20/25 லட்சம் ) வாங்கி ஊர்ல உள்ள 10 தன்னார்வ இளைஞர்கள்/பெரியோர்கள்  முன்னிலையில் வங்கியில் போட்டு வைத்து கொண்டு  ஊருக்கு தேவையான நல்ல காரியங்களை செய்து கொள்ளலாம்.

அப்படி அவர் ஜெயிக்காத பட்சத்தில் அந்த தொகையை அவருக்கே கொடுத்து விடலாம்.

இப்படி செய்றதுனால சில குடிமகன்கள்  இதற்கு  எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பரவாயில்லை அவங்க ஓட்டு இல்லாட்டி அவங்க வீட்டுக்காரம்மா மற்றும் குடும்ப ஓட்டு கண்டிப்பா கிடைக்கும்.

இதை நம்ம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இருந்து ஆரம்பிக்கலாம்.

ஓட்டுக்கு பணம் வாங்குறது தப்பு தான். ஆனால்  அது  நல்லதுக்கு செலவு ஆகும் போது எதுவுமே தப்பில்லை.