- காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள பழகுங்கள்
- தினமும் வெறும் வயிற்றில் உங்களால் முடிந்த அளவு தண்ணீர் குடியுங்கள்
- தினமும் காலையில் குறைந்தது 1/2 மணி நேரம் நடக்கவும்.முடிந்தால் ஓடலாம்.
- காலை உணவு 8-8:30 மணிக்குள், மதிய உணவு 12.:30-1:00 மணிக்குள் மற்றும் இரவு உணவு 7:30-8:00 மணிக்குள் எடுத்துக்கொள்ள பழகுங்கள்.
- முடிந்த அளவு சாப்பிடும்போது தன்னிற் எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.அது செரிமானத்துக்கு தடையாக இருக்கும்.
- வாரம் இருமுறை எதாவது ஒரு கீரை எடுத்துகொள்ளுங்கள்.தண்டு கீரை, சிறு கீரை, வெந்தய கீரை, முருங்கை கீரை இவற்றில் எதையாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாள் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது எடுத்துக் கொள்ளுங்கள் .
- எப்போதும் போல அரிசி & உளுந்து மாவு தோசைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் கம்பு தோசை, கேழ்வரகு தோசை, கோதுமை தோசை இவைகளையும் முயற்சி செய்யுங்கள்.
- சாயந்தர வேளையில் பஜ்ஜி, வடை எடுத்துக் கொள்ளும் வேளையில் சில நாட்கள் கொண்ட கடலை, அவித்த சோளம், அவித்த கடலை, பச்ச பயிறு இவைகளில் ஏதாவது ஒன்றை சாப்பிடவும்.
- முடிந்தளவு கோக், பெப்சி குடிப்பதை தவிர்க்கவும். பதிலாக இளநீர்,எலுமிச்சை சாறு, மோர் இவைகளை குடிக்கவும்.
- PIZZA & BURGER இவைகளை உடனே நிறுத்த சொல்லல கொஞ்சம் குறைச்சுக்கங்க.
- கருவேப்பிலை, முடக்கத்தான், தூதுவளை இவைகளை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.(இதெல்லாம் கடைகளில் கிடைக்காது நம் வீட்டில் பால்கனியில் அல்லது மொட்டை மாடியில் வளர்க்கலாம்)
- தினமும் 1/2 மணி நேரம் உங்க மனசுக்கு புடிச்சத செய்ங்க. நல்ல விசயங்களை உங்க மனசுக்கு புடிச்சதா வச்சுக்குங்க.
- தினமும் குறைஞ்சது 7 மணி நேரம் துங்குங்க. குறிப்பா துங்க வேண்டிய நேரத்துல துங்குங்க.
- எக்காரணத்தைக் கொண்டும் ஆபீஸ் வேலையை ஆபீஸ் லேயே முடிச்சுருங்க. வீட்டுக்கு வேலைய எடுத்துட்டு வராதிங்க.
- வாரத்துல ரெண்டு நாள் (சனி, ஞாயிறு )குடும்பத்தை பக்கத்துல உள்ள பார்க்குக்கு கூட்டிட்டு போயி ஒரு 1 மணி நேரம் செலவிடுங்கள். சம்பாரிக்குறது யாருக்கு சார் குடும்பத்துக்குத் தானே.
- மாசத்துல ஒரு தடவ அல்லது ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ ஏதாச்சும் ஒரு விசயத்துல கஷ்டபடுறவங்களுக்கு உங்களால் முடிஞ்ச சின்ன உதவிய அவங்களுக்கு நீங்களே நேரடியா பண்ணுங்க.
- வீட்டுக்கு வர்றவங்க கிட்ட பேசும்போது டிவிய கொஞ்சம் ஆப் பண்ணிடுங்க.
- வருசத்துக்கு ஒரு தடவையாவது எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும் போங்க.
- எவ்வளவு கஷ்டம் வந்தாலும் "இதுவும் கடந்து போகும்"னு மனச தேத்திக்குங்க.
- நல்லதே நினைங்க நல்லதே பேசுங்க நல்லதே நடக்கும்.
அதீத சிந்தனையில்,அனுபவத்தில்
ReplyDeleteகொடுத்துள்ள ஆலோசனைகள் அனைத்தும்
அருமையானவை பயனுள்ளவை
எளிதாகப் பயன்படுத்தக் கூடியவை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி Ramani S அவர்களே!
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
ReplyDeleteநடைமுறைக்கு கொண்டு வந்தால் நல்லது தான்.
பகிர்வுக்கு நன்றிங்க.
விருந்தினர் வந்தால் TV -ஐ மூடிவிடுங்கள்.(அற்புதமான,இன்றைய உடனடி தேவை.)
ReplyDelete