Saturday, June 20, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 20/06/2015

1)  நாம யாரையாவது நல்லா இருக்கியான்னு கேட்டா, ஏதோ இருக்கேன்னு சொல்றவங்க கண்டிப்பா நம்மகிட்ட ஏதோ எதிர்பார்க்குறாங்க இல்லாட்டி அவங்க எதிர்பார்த்த ஒன்ன நாம நிறைவேற்றலன்னு அர்த்தம்.

2)  ஒரு நல்ல உணவுண்ணா காலையில் சமைச்சா இரவுல கெட்டுப் போயிடனும்.

3) ஒரு கடி ஜோக் :
    ரெண்டு யானை படம் பார்க்க போக பஸ்ல போயிக்கிட்டு இருந்துச்சாம். கொஞ்சம் தூரம் போனவுடன் அந்த ரெண்டு யானையும் பஸ்ஸ விட்டு இறங்கிடுச்சாம். ஏன் ?
  ஏன்னா அவங்க பார்க்க போன அந்த படத்த அந்த பஸ்லேயே போட்டுடாங்களாம்....(வன்முறை வேண்டாம் ப்ளீஸ் ...)

4)  மீசை Vs தாடி
     நானும் நீயும் ஒன்றாகத்தான் பிறந்தோம். நீ மட்டும் வீரத்திற்கு நான் சோகத்திற்கா...முகத்திலும் கூட இத்தனை முரண்பாடுகளா?

5) நம்ம வாழ்க்கை உணவு முறையும் ரஜினி படம் போல தான்
    ரஜினி படம் : தொடக்கத்தில் பணக்காரனாக ஆரம்பித்து இடையில் ஏழையாகி இறுதியில் பணக்காரனாவது.
   நம் உணவு முறை - தொடக்கத்தில் நம் பாரம்பரிய உணைவை சாப்பிட்டு விட்டு இடையில் பீட்சா பர்கர் சாப்டிட்டு இறுதியில் மறுபடி நம் பாரம்பரிய உணவுக்கு வருவது.

6) நம்ம ஊர்ல ஒரு பழமொழி உண்டு . மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று. ஆனால் நம்ம தலைவர்கள் ஒரு படி மேலே போய் மீன வறுத்துக் கொடுத்து விடுவார்கள். என்ன, வறுத்த மீன் 5 வருசத்துக்கு ஒரு தடவ,  இல்லாட்டி அப்பப்போ நடக்குற இடைத் தேர்தல் சமயத்துலதான் கிடைக்கும்.

7) ஆர்.கே  நகர் தொகுதியில் ட்ராபிக் ராமசாமி அவர்கள் ஜெயிச்சுட்டா ?
யார்   யார் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்?  கமெண்ட் ல சொல்லுங்களேன்?

நான் ஒருத்தரோட மைண்ட் வாய்ஸ் சொல்றேன்
நீதிபதி குமாரசாமி: இதுக்கு நீ உள்ளேயே இருந்துருக்கலாம்...

No comments:

Post a Comment