Friday, June 12, 2015

ஏழை இந்தியாவும் பணக்கார இந்தியனும்.

இந்தியா வல்லரசாக இன்னும் 5 வருடமே இருக்கும் நிலையில் ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சி என்ன என்று யோசித்தால், இனி வரும் 5 வருடங்களுக்கு எத்தனை நாள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு அம்பானி மட்டும் மற்றவர்களின் தலையில் ஏறி அடுத்த ஊரைப் பார்த்தால் அந்த ஊரின் வலிமையும் பெருமையும் அடுத்த ஊருக்கு தெரியாது.அனைவரும் ஏணியின் மீது ஏறி மேட்டிற்கு வந்தால்தான் அடுத்த ஊருக்கு அந்த ஊரைப் பற்றிய பெருமையும் வலிமையும் தெரியும்.அதோடு பயம் கலந்த மரியாதையும் இருக்கும்.

இங்கு எல்லோருக்கும் ஏணி தானாக கிடைப்பதில்லை.அதை அடையவே மக்களால் ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.ஆனால் அவர்களால் இதை செய்ய அல்ல நினைக்க கூட நேரமில்லாமை தான் வருந்ததக்க விசயம்.


இந்த ஒருதலை பட்ச வளர்ச்சியின் ஆரம்பம் எது.உயரத்தை பார்த்தவன் பள்ளத்தின் இடர்களை மறந்ததாலா?தான் மட்டுமே உயரத்தின் சொகுசை அனுபவிக்க துடிக்கும் ஆசையாலா?இல்லை பலருக்கு ஏறவே மனம் இல்லையா?


- ஒரு பொழுதுபோக்கு கூத்தாடிக்கு கிடைக்கும் ஊதியமும், அங்கீகாரமும் ஏன் நம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விவசாயிக்கும், தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை.

- ஐஐடி யில் படித்த ஒரு இளைஞன் வருடத்திற்கு 20 இலட்சம் வாங்கும் போது பத்தாவது மட்டுமே படித்த ஒரு கிரிக்கெட் வீரர் பல கோடிகளை சம்பாதிப்பது எப்படி?

- இதுவரை எந்த ஒரு ஊடகத்திலாவது நம் அன்றாட தேவைகளை உருவாக்கித் தரும் நபர்களை முன்னிலைப்படுத்தி ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றது உண்டா?.அப்படி வெற்றி பெறாமல் போக நாமும் ஒரு காரணம் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள உங்களுக்கு தைரியம் உண்டா?

- ரசிகர்களால் தெய்வங்களாகவும், ரோல்மாடலாகவும், தலைவனாகவும் மதிக்கப்படும் எந்த ஒரு நடிகரும்/கிரிக்கெட் வீரரும்/அரசியல்வாதியும்/தொழில் அதிபர்களும் தங்கள் ரசிகர்களின்/தொண்டர்களின் எதிர்காலத்தை நினைத்ததுண்டா? அப்படி எண்ணி இருந்தால் அவர்கள் சமநிலை பற்றிய எண்ணத்தை மறந்தது ஏன்?.

- படிக்காத ஒரு காமராஜர் தான் தமிழ்நாட்டில் பல பேரின் இருளுக்கு ஒளி கொடுத்தார்.படித்த ஒரு இளைஞானால் ஏன் அவனால் ஒருவருக்காவது ஏணியாக இருக்க முடியாது?

- தலைவனால் ஏற்படுத்த முடியாத சமநிலையை ஏன் தொண்டர்களால் தங்களுக்காக இனி ஏற்படுத்த முடியாது.

இது சாத்தியமா என்று ஒரு கணம் யோசிப்பதை விட முயற்சிக்கலாமா என்று முடிவு பண்ணலாமே. உன் விழியால் பிறருக்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம் தானே!!!

1 comment:

  1. Average KarppasamiJune 12, 2015 at 11:28 PM

    The only solution is to allow India to be taken over by Communist China and wait for something good to happen. Is that what you are suggesting?

    ReplyDelete