காலத்திற்கேற்ப மாற்றம் தேவை. இது தொழில்நுட்ப மாற்றத்திற்கு மட்டும் அல்ல. எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். நம்மைச் சுற்றியே இன்று பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல விவசாயத் துறையிலும் நாம் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கையாண்டு தான் ஆகா வேண்டும்.
பணமும் மன நிறைவும் தரும் கீரை சாகுபடி:
- நீர் அதிகம் தேவைப்படாது.
- கை இறைவை கொள்ளலாம்.
- 15-20 நாட்கள் சாகுபடி காலம்.
- தினமும் கீரை பறிக்கும் வகையில் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.
- ஒரே வகையான கீரையாக இல்லாமல் தண்டு கீரை, பசலி கீரை, மணத்தக்காளி, வெந்தய கீரை, கொத்தமல்லி என எல்லாம் கலந்து பயிரிட்டால் சிறப்பு.
- மார்க்கெட்டில் மொத்தமாகவும், சந்தைகளில் சில்லறையாகவும் விற்பனை செய்யலாம்.
- ரெகுலர் கஸ்டமர் பிடித்து வைத்துக் கொள்வது உங்கள் வியாபாரச் சிந்தனையைக் கூட்டும்.
- பீட்சா, பர்கர் விற்பது வியாபார நோக்கத்தை மட்டுமே கொண்டது. ஆனால் இந்த கீரை சாகுபடி பண வரவை மட்டுமல்ல நம் பாரம்பரிய உணவுகளை பலருக்கும் கொடுத்து ஆரோக்கிய வாழ்வை நிலை நிறுத்துகிறோம் என்ற மன நிறைவையும் தரும்.
No comments:
Post a Comment