Friday, June 19, 2015

மண்வாசம் - அத்தை திருவிழாவுக்கு வந்திடுங்க. வரும்போது அத்தாச்சியையும் கூட்டி வந்திடுங்க



கோயில் திருவிழா...ப்பா இந்த வார்த்தைய கேட்டாலே அப்பல்லாம் உடம்பே சிலிர்க்கும்...உடம்பு மனசு ரெண்டும் சேர்ந்து ஆட ஆரம்பிச்சுடும்...ஏன் இப்ப கூட ஒரு புது feel தான் இருக்கும்.

எங்க ஊர் மற்றும் ஊர  சுத்தி உள்ள பல கிராமங்களில் பல கோவில்கள் உண்டு. தை மாசம் ஆரம்பிச்சதிலேருந்து ஒவ்வொரு கோயில் திருவிழாவும் ஆரம்பிச்சுடும். மனசும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுடும்.

என்ன தான் கஷ்டப்பட்டாலும் திருவிழான்னு வந்துட்டா நம்ம ஊரு ஆளுங்க எப்படியாவது சிறப்பா செய்யனும்னு முனைப்பா இருப்பாங்க.ஏன்னா திருவிழான்னு வந்துட்டா வீட்ல பல செலவு இருக்கு. கோயில் வரி, சொந்தகாரங்க எல்லாம் வந்தா அவங்களுக்கு விருந்து, வீட்ல எல்லாருக்கும் புது துணிமணிகள், சாமிக்கு படைக்குரதுக்கு ஆகும் செலவுன்னு ஒரு லிஸ்டே நீளும். ஆனா இத்தனை செலவையும் மீறி மனசுக்குள்ள ஒரு பக்தி கலந்த மகிழ்ச்சி இருக்கும்.நம்ம படைச்ச சாமிக்கு நாம நன்றி கடன் செலுத்துற மாதிரிதான் ஒவ்வொருவரும் பய பக்தியோட கும்பிடுவாங்க.

அது எல்லாம் பெரியவங்க டிபார்ட்மெண்ட். நாம நம்ம விசயத்துக்கு வருவோம்.

கோயில் திருவிழா காப்பு கட்டறதுல ஆரம்பிக்கும். காப்பு கட்டியாச்சுன்னா யாரும் ஊர  விட்டு வெளிய போக கூடாது.பக்கத்து ஊர் சாவுக்கு கூட போக மாட்டாங்க.திருவிழா முடிஞ்சதுக்கப்புறம் தான் போவாங்க.அவ்வளவு கட்டுப்பாடா இருக்கும்.
அப்புறம் திருவிழாவுக்கு தேவையான PURCHASE ஆரம்பிக்கும்.எல்லாம் பக்கத்துல உள்ள டவுனுக்கு போயிதான் வாங்க போவாங்க. சில பேர் பஸ்ல போவாங்க.இல்லாட்டி சில பேர் மாட்டு வண்டி பூட்டிகிட்டு 2,3 குடும்பமா போவாங்க.போயி, அரசாமன், பூஜை சாமான்,துணிமணி மற்றும் சொந்தக்காரங்க வந்தா படுக்குறதுக்கு பாய் எல்லாம் வாங்கிகிட்டு வருவாங்க.

அப்புறம் சொந்தகாரங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போயி நேரடியா அழைக்க போவோம். சில பேர் அவங்க வீட்ல இருக்க சின்ன பிள்ளைங்கள அழைக்க போறப்பவே கூட்டிட்டு வந்துடுவாங்க.பெரியவங்க வயல் வேலைய முடிச்சிட்டு மொத நாளோ அல்லது திருவிழா அன்னைக்கோ வர்றேன்னு சொல்லி அனுப்புவாங்க. சின்ன பசங்க டிரஸ் மற்றும் பள்ளிகூட பை எல்லாம் எடுத்துகிட்டு கிளம்பிடுவாங்க.பள்ளிக்கூடம் பக்கத்துல இருந்தா திருவிழா முடியிற வரைக்கும் சில பேர் இங்கேயிருந்தே போவாங்க.

திருவிழா ஒரு வாரத்துக்கு மேல நடக்குமா..அதனால வீட்லேயே நிறைய பலகாரங்கள் தயார் பண்ணி வச்சுக்குவோம் .

தினமும் இரவில் நாடகம், திரையில் சினிமா, கரகாட்டம் அப்புறம் பாட்டு கச்சேரி எல்லாம் நடக்கும். கோயில ஒட்டி நிறைய கடை போட்டு இருப்பாங்க.
டி கடை, புரோட்டா கடை, பலகாரக் கடை, வளையல் மணி கடை,பலூன்  கடை அப்புடின்னு நிறை கடைகள் இருக்கும்.பக்கத்து ஊர் நண்பர்கள் வந்தா அவர்களுக்கு டீ மற்றும் பலகாரங்கள் வாங்கி தருவது நமக்குள்ளே ஒரு ஆனந்தம்.

இரவு நிகழ்ச்சி பார்க்க போறதுக்காக கோயில்ல உட்கார இடம் புடிக்க வீட்ல உள்ள சின்ன பசங்க கிட்ட 4,5 பாயை கொடுத்து அவங்கள போயி இடம் பிடிக்க சொல்லி 6 மணிக்கு எல்லாம் அனுப்பி வச்சிருவாங்க. அவங்க போயி அங்க பாயை போட்டு இடம் பிடிச்சிட்டு ஒரே ஆட்டமா தான் இருக்கும். அங்க இடம் பிடிக்கிறதுக்கும் ஒரே சண்ட தான் நடக்கும்.கோயில் பக்கத்துல உள்ளவங்க நடந்தே போயிடுவாங்க. கொஞ்சம் தூரமா இருந்தா மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. பசங்க எல்லாம்  தீப்பந்தம் கொளுத்தி கிட்டு நடந்தே போவோம். சைக்கிள் இருக்கவங்க சைக்கிள்ள வருவாங்க. அந்த சைக்கிளை எல்லாம் பாதுகாக்க சைக்கிள் ஸ்டான்ட் ஏலம் எடுத்து வச்சிருப்பாங்க.

மாமா,சித்தப்பா எல்லாம் சின்ன பசங்களுக்கு காசு கொடுப்பாங்க  இல்லாட்டி பலூன், மிக்சர், ஸ்வீட் இப்படி ஏதாவது வாங்கி கொடுப்பாங்க.

பசங்க எல்லாம் கூட்டம் கூட்டமா சேர்ந்துகிட்டு தங்க மனசுக்கு பிடித்த பொண்ணுங்க உட்கார்ந்து இருக்க இடத்துல போயி நின்னுகிட்டு ஒரே சீன இருக்கும்.பொண்ணுங்களும் பயங்கரமா டிரஸ் பண்ணிட்டு புல் மேக்கப் ல தேவதை மாதிரி வந்திருப்பாங்க.யாராச்சும் சின்னப் பசங்க மூலமா வளையல் மணி எல்லாம் வாங்கி குடுத்துடுவானுக. அவங்க அத போட்டுக்கிட்டு பசங்க முன்னாடி நடந்து போவாங்க. அப்போ நம்ம பய மனசுல ஆயிரம் பட்டம்பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சுடும்.

 சீட்டாட்ட கிளப் ஏலம் எடுத்து நைட் புள்ள அது தனியா நடந்துகிட்டு இருக்கும்.

அந்த காலத்துல எனக்கு நாடகம் னா பிடிக்காது.ஒவ்வொரு கோயில்லையும் atleast 2 நாடகமாவது நடக்கும். அதுல முக்கியமா வள்ளி திருமணம்  மற்றும் அரிச்சந்திரா தான் எல்லா ஊர்லயும் போடுவாங்க. நாடகம் போடுற ன்னைக்கு அதிகம் இளைஞர்களை பார்க்க முடியாது. ஆனா வயசானவங்க நிறைய இருப்பாங்க.

நிகழ்ச்சிய பாதில நிறுத்திட்டு வானவேடிக்கை நடக்கும். ஒவ்வொரு ஊர்க்காரங்களும் அவங்கவங்க வெயிட் காட்டுறதுக்கு செம கலர்புல்லா நடத்துவாங்க.

தினமும் ஸ்பீக்கர் செட், tube லைட் வீதி முழுவதும் காட்டி செம அமர்க்களமா  இருக்கும். பத்தாததுக்கு அலங்கார லைட் கட்டி சாமிய நல்ல அலங்கரிச்சிருக்கும்.

நைட்ல சின்ன புள்ளங்க எல்லாம் நிகழ்ச்சி பாதியிலேயே தூங்கிடும். அவங்கள கெளப்பி வீடு கொண்டு போயி சேர்க்கிறதுக்குள்ளே பெரியவங்களுக்கு பாடாய் போயிடும். இன்னும் சில பேர் நைட் அங்கேயே தூங்கிடுவாங்க. காலையில 7 மணி வாக்குல அந்த பக்கம் போனமுன்னா திட்டு திட்டா அங்காங்கே 10 தலைகள் தூங்கிகிட்டு இருக்கும் சூரியன் அடிக்கிறதுகூட தெரியாம.

   - திருவிழா நினைவுகள் தொடரும் அடுத்த பதிவில்






No comments:

Post a Comment