சின்ன வயசுல நெல்ல அரைச்சு அரிசியாக்குறது ஒரு 5 நாள் வேலை. அதுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேலை இருக்கும். இந்த Processa பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து பண்றப்போ இன்னும் interestinga இருக்கும்.
முதல் நாள் எல்லாரும் சேர்ந்து நெல் அவிக்கிறதுக்கு தேவையான காய்ஞ்ச சருகுகளை பொறுக்க எதாவது ஒரு ஆரஸ்பதி தோப்புக்கு போவோம். எல்லோரும் ஆளுக்கு 3-4 சணல் சாக்கு எடுத்துக்கிட்டு போயி சருகுகளை அள்ளிக்கிட்டு வருவோம். அந்த சருகுகளை அள்ளுவதே ஒரு பெரிய கலைதான். முட்டு முட்டாக ஒதுக்கி யார் அதிக முட்டு கட்டுறாங்கன்னு போட்டி வச்சுக்குவோம்.
இரண்டாம் நாள், நெல் அவிக்கிறதுக்கு தேவையான டிரம்மை சுத்தம் செய்து அதில் சாம்பல் பூசி தயார் செய்வோம்.டிரம் கருக்கக் கூடாதுன்னு தான் இந்த சாம்பல். அந்த காலத்துல எல்லார் வீட்டிலேயும் டிரம் இருக்காது. தெரிஞ்சவங்க வீட்டிலே தான் டிரம் எடுத்துக்குவாங்க. சிலர் அந்த டிரம்மை கூட அடுத்தவங்களுக்கு கொடுக்க மாட்டாங்க, கொடுத்தா ஏதாச்சும் டிரம்முக்கு சேதாரம் ஆயிடும்மொன்னு தான்.பெரும்பாலும் இரவு நேரம்தான் நெல் அவிக்க ஆரம்பிப்பாங்க. நெல் அவிக்கும்போது அந்த இருட்டுல கொஞ்சம் குளிர்ல அந்த நெருப்பு கொஞ்சம் இதமா தான் இருக்கும்.அவிச்ச நெல்லை எல்லாம் வாசல்ல கொட்டி ஒரு தார்பாயை போட்டு மூடி வச்சுட்டு தூங்கிடுவோம்.
மூணாம் நாள் மற்றும் நாலாம் நாள் அவிச்ச அந்த நெல்லை பதமா காய வைப்பாங்க. ஒரேயடியாகவும் காய வச்சிட மாட்டாங்க.2 மணி நேரம் காய வைப்பாங்க அப்புறம் கொஞ்ச நேரம் முட்டு கட்டி வச்சிடுவாங்க.நல்லா பதமா காஞ்சதுக்கப்புறம் ஒரு நாலைஞ்சு வீடா சேர்ந்து நெல் அரைக்க முடிவு பண்ணுவாங்க.ஏன்னா அப்போ எல்லோர்கிட்டயும் மாட்டு வண்டி இருக்காது.
ஐந்தாம் நாள் ஒரு மாட்டு வண்டிய பூட்டிகிட்டு 2-3 குடும்பம் ஒண்ணா போவோம்.போறதுக்கு முன்னாடி புலி சோறு கட்டிக்கிட்டு கிளம்புவாங்க.
ஏன்னா RICEMILL எல்லா ஊர்லயும் இல்லாததால் கூட்டம் அதிகமா இருக்கும். அதனால காத்திருந்து தான் அரைக்க வேண்டும். சில நாட்களில் மின்சாரம் இல்லாமல் போயி விடும். எனவே கரண்ட் வரும் வரை காத்திருந்து தான் அரைக்க வேண்டும். சில நேரத்துல மொத நாள் போனா மறுநாள் தான் வர்ற மாதிரி இருக்கும்.
இவ்வளவு கஷ்டம் இருப்பதால் யாருக்கும் அந்த அரிசிய ஒரு பருக்கை கூட WASTE பண்ண மனசு வராது.
இப்பல்லாம் அப்படியா

சூப்பர். மிகவும் விரிவா நீங்கள் எழுதலாம்!!!
ReplyDeleteNice remembrance of old days! We also do the same!
ReplyDeleteஎங்கூட்லே அண்டாலெதான் நெல் அவிப்பாங்க. ஊருக்குள்ளெயே மில் இருப்பதால் அங்கே போய் அரைச்சுகிட்டு வந்துருவோம். வேலைக்கு இருக்கும் உதவியாளருடன் மிஷீனுக்கு நான் போவேன். எனக்கு அந்தமெஷீன் போடும் ' கசகசகச்சக்' சத்தம் ரொம்பப் பிடிக்கும். ரெண்டு காதுக்குள்ளேயும் ஆட்கட்டி விரலை வச்சு நல்லா அடைச்சுக்கிட்டு அப்பப்பக் கொஞ்சம்விரலைஎடுத்து மீண்டும் அடைச்சால் வரும் ஓசைதான் ம்யூஜிக்:-)
ReplyDeleteஆமாம்.... அதென்ன என் மகள்சொல்றது போல் டைகர் சோறு:-)))
ஆமாம்.... அதென்ன என் மகள்சொல்றது போல் டைகர் சோறு:-)))
ReplyDeleteஅதே?
@பழனி கந்தசாமி.
ReplyDeleteநம்ம வீட்டில் புளி சாதம் செய்யும்போது அதுக்கு ரெண்டுவயசு மகள் புளியை புலின்னு நினைச்சு டைகர் பாம் என்றாள். பாம் என்பது எங்க வீட்டுப் பழக்கம் சோறு என்பதற்கு:-) தச்சு பாம் பப்பு பாம் இப்படிச் சொல்வது குடும்ப வழக்கம்.
இவர் //.போறதுக்கு முன்னாடி புலி சோறு கட்டிக்கிட்டு கிளம்புவாங்க.// என்றதால் டைகர் சோறுன்னு சொன்னேன். காலம் கிடக்கும் கிடப்பில் bomb வேணாமேன்னு:-)
@ பழனி. கந்தசாமி & துளசி கோபால், எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்...அது புளி சோறு
ReplyDelete