Monday, June 8, 2015

எனது கிறுக்கல்கள்: வரதட்சணை கேட்கலாமா? வேண்டாமா?

அம்மா
என் கனவுகளின் முதல் உருவம்
என்னை காதலித்த முதல் உள்ளம்
என் இதழ் உதித்த முதல் கவிதை
என் இருளின்போதெல்லாம் முதல் வெளிச்சம்

கனவு

உறங்கும் என் விழிகளால் மட்டுமே அவளுடன் பேசுகிறேன் உறங்கா என் இதய ஆசைகளை.

அந்நியன்
உழைக்கத் துடிக்கும் கரங்களும் உறங்க மறுக்கும் விழிகளும்
வெல்லத் துடிக்கும் இதயமும் வியக்க வைக்கும் ஆற்றலும்
இருந்தும் இந்தியன் தலை நிமிர முடியவில்லை
அவன் இந்தியாவில் இல்லை.


காதலி
என் தாயை விட உன் மேல்தான் பாசம் அதிகம்
என் தந்தையை விட உன் மேல்தான் மரியாதை அதிகம்
என் நண்பனை விட உன் மேல்தான் நம்பிக்கை அதிகம்
அடுத்த ஜென்மத்திலும் உன்னுடனே சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என் அழகு இந்தியாவே.

வரதட்சணை
உழைக்க மறுக்கின்ற உணர்வுகளை மதிக்கத் தெரியாத
ஒரு மிருகத்துடன் சில இரவுகள் உறங்காமல் இருக்க
ஒரு உத்தமி கொடுக்கும் உண்டியல் சேர்க்கை.

ஒரு தலை ராகம்
அழியாத கோலமாய் என் நெஞ்சில் நீ
அதில் தெரியாத ஒரு புள்ளியாய் உன் நெஞ்சில் நான்.

அதிசயம்
பேசாத புது வார்த்தை பைந்தமிழின் அதிசயம்
பிறை நாளில் முழு நிலவு இரவுக்கு அதிசயம்
மழை நாளின் வாசனை மண்ணுக்கு அதிசயம்
மழலை பேசும் வார்த்தை எல்லாம் தாய்க்கு அதிசயம்
உன் நெஞ்சில் நான் இருந்தால் அது ஒரு அதிசயம்
என் நெஞ்சில் நீதான் என்றும் அதிசயம்

No comments:

Post a Comment