இந்த ஞாயிறு காலை 10:30 மணிக்கு டிவியில் ஒவ்வொரு சேனலாக தேடி அலையும் போது மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நாம் தினந்தோறும் சாலையில் கடந்து போகும் எளிய மக்களை(மீன் விற்கும் பெண், காய்கறி விற்பவர் மற்றும் சாலையோர வியாபாரிகள் ) சந்தித்து அவர்களுடைய தினசரி வாழ்க்கை அனுபவங்கள், வாடிக்கையாளர்களுடன் அவர்களுடைய உரையாடல்,வியாபாரத்தில் லாப நஷ்டங்கள் என உரையாடி விட்டு கடைசியில் அவர்களுடைய சின்ன ஆசையை நிறைவேற்றி விட்டு முடிப்பார்கள்.
இந்த வார நிகழ்ச்சியில் சாலையோரத்தில் மீன் விற்கும் ஒரு அம்மாவுடன் அவர்களின் தினசரி வாழ்க்கை அனுபவங்களை நேர்கண்டார் ஒருவர் .
பார்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த அம்மாவின் பகட்டு இல்லாத அந்த வெள்ளந்தியான நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது.
சில வருடங்களுக்கு மீனின் விலை மற்றும் இப்போது மீனின் விலை, மீன் வாங்க வருபவர்களுடன் நடக்கும் அனுபவம், மீன் விற்காவிட்டால் அவர் மன நிலை எப்படி இருக்கும் என அத்தைனையும் பகிர்ந்து கொண்டார்.
உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டதற்கு, இன்னைக்கு இந்த மீனெல்லாம் வித்திட்டாலே போதும்னு சொன்னங்க. அத கேட்கும் போதே மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவங்களோட ஆசை கூட அவங்க தொழிலோட ஒட்டியே இருந்தது.விடாபிடியாக இவரும் அவருடைய ஆசையை கேட்க, வெயில் காலத்தில் மீன் விற்கும் போது வெயில் படாமல் இருக்க ஒரு குடை இருந்தால் நல்ல இருக்கும்னு சொன்னங்க. பெட்டி எடுத்தவரும் அவர் ஆசையை நிறைவேற்றினார்.
ஞாயிற்று கிழமைகளில் மற்ற சேனல்களை திருப்பினால் எங்கு பார்த்தாலும் இருக்கும் சினிமாத்தனமான நிகழ்ச்சிகளை பார்த்து சலித்து போன எனக்கு இந்த நிகழ்ச்சி சற்று மாறுதலாக இருந்தது.உங்களுக்கும் ஞாயிற்று கிழமைகளில் உங்க கைல ரிமோட் கிடைச்சா நீங்களும் try பண்ணி பாருங்க.
ஓ நிகழ்ச்சி பேரு சொல்ல மறந்துட்டேனே ...சின்ன சின்ன ஆசை

Nice one
ReplyDelete