Tuesday, April 24, 2012

ஊத்திக் கொடுக்கும் அரசாங்கமும் ஊரைக் கெடுக்கும் குடிமகன்களும்

குளிரின் தாக்கத்தால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக்க வெள்ளைக்காரன் குடிக்க ஆரம்பித்து அதை நம் மக்களுக்கும் கத்துக் கொடுத்துட்டு போயிட்டான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா அது,
1) உடல் அலுப்பு தீரவும்
2) மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும்
3) சோகத்தை அனுசரிக்கவும்
4) கோபத்தை அதிகப்படுத்தவும்
5)
இப்போ கொளுத்துற வெயில்லயும் நம்ம ஆளுங்க பாலக் கட்டைக்கு கட்டை குடிச்சிட்டு தானும் கெட்டு தன் குடும்பத்தையும் கெடுக்குறதுக்கு இந்த திராவிட கட்சிகளின் பங்கு இருக்கே...அட அட....

Monday, April 9, 2012

விவசாயம்...what you mean by விவசாயம்


ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாக ஆசைப்படுகிறான்.
நடிகரின்/நடிகையின் வாரிசு நடிகனாக/நடிகையாக/டைரக்டராக ஆசைப்படுகிறார்கள்.
டாக்டரின் வாரிசு டாக்டராக ஆசைப்படுகிறான்.
கிரிக்கெட் வீரரின் மகன் பேட்ஸ்மேனாக ஆசைப்படுகிறான்.

மேலே சொன்ன எந்த ஒரு ஆசையும் அவர்களது பெற்றோர்களால் நிராகரிக்கப்படுவதில்லை.

ஆனால் எந்த ஒரு விவசாயின் மகனும் விவசாயியாக விரும்புவதில்லை.அப்படி விரும்பினாலும் அவர்களது பெற்றோரால் ஆதரிக்கப்படுவதில்லை."நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம் நீயாவது இந்த நிலத்துல கஷ்டப்பட வேண்டாம்" என்று விவசாயத்தின் மேல் வெறுப்பான ஆதங்கம் வைக்கப்படுகிறது.

ஒரு மனிதன் வாழத் தேவையான உணவு உற்பத்தி துறை விவசாயத்தின் மேல் விருப்பம் இல்லாமல் ஆடம்பர துறைகளை தேர்வு செய்ய தூண்டுதலாக இருக்கும் காரணிகள் என்ன என்ன.....

- ஒரு பொருளை தயாரித்தவன் அதன் விளையை நிர்ணயிக்க முடியாத நிலை விவசாயத்தில் மட்டும் தான் உண்டு.

- கிரிக்கெட்- "மேன் ஆப் தி மேட்ச்"/சினிமா - "தேசிய விருது/மாநில விருது/டாக்டர் பட்டம்",அரசியல் - "பல தரப்பட்ட பட்டங்கள்" என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சிறப்பிக்கும் அரசாங்கம் எந்த ஒரு விவசாயியையும் இதுவரைக்கும் கவுரவித்ததில்லை.

- எந்த ஒரு துறையிலும் 58 வயசுக்கு பிறகு ஓய்வும், ஓய்வுக்குப் பின் ஓய்வூதியமும் வழங்கப்படும்(இன்னும் ஒருபடி மேல் VRS என்று வேலையே செய்யாமல் ஊதியம் பெறுவது).ஆனால் விவசாயி மட்டும் தான் ஓய்வில்லாமல் உயிர் போகும் வரை உழைக்கும் ஒரு ஜீவன்.விவசாயம் பொய்த்தாலும் உயிரை விடுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாதவன்.

- அந்நிய நாட்டுக்காரனின் தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி பால் வார்க்கும் அரசாங்கம், நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்திற்கு 3 மணி நேரம் மின்சாரம் வழங்கி விவசாயியின் வயிற்றில் அடிக்கிறது.

- சரியான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் எல்லா விவசாயிகளும் இடைத் தரகர்களால் ஏமாற்றப்படுவது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பம் அவசியம் தான்.ஆனால் வாழ உணவு ரொம்ப முக்கியம்.ஒரு கட்டத்துல சாப்பிட சோறு இல்லாமல் எல்லாம் செல்போன்/லேப்டாப் இதை எல்லாம் தான் திங்கனும்.இப்பவும் கிராமத்துல கொஞ்ச பேர் கவுரத்துக்காக தான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.அரசாங்கம்/மக்களின் கூட்டு முயற்சியால் தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.அரசாங்கமும்/நாமும் இன்னும் காலம் தாழ்த்தினால் நமது வாரிசுகள் விவசாயத்தை மட்டும் அல்ல...சாப்பாட்டையும் மறந்திட வேண்டியது தான்.