Thursday, November 3, 2011

கேட்க கூடாத கேள்விகள்

சாப்ட்வேர் என்ஜினியர்:
தான் செய்த தவறை திருத்தம் செய்ய கூட client-யிடமிருந்து பணம் வசூலிப்பது ஏன்?

சினிமா நடிகர்கள்:
சண்டைக் காட்சிகளில் டூப் போடும் நடிகர்கள், நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டாதது ஏன்?

போலிஸ்:

இதுவரை வந்த 50 சதவீதம் படங்களில் உங்கள் துறையை கிண்டல் செய்த பின்னரும் நீங்கள் கோபப்படாதது ஏன்?

அரசு ஊழியர்:
அரசாங்க உத்தியோகம் வாங்க காட்டும் ஆர்வத்தில் 10 சதவீதம் கூட உங்கள் உழைப்பில் தெரியாதது ஏன்?

மார்க்கெட்டிங் மேனேஜர்:

அயல் நாட்டு பொருட்களை வியாபாரம் செய்ய தெரிந்த உங்களுக்கு நம் நாட்டு விவசாயிகள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி?

வாக்காளர்கள்/மக்கள்:
தங்களது 5 வருட வாழ்க்கையை வெறும் 500 ரூபாய்க்கு அடமானம் வைக்க பழகிக் கொண்டது எப்படி?

அரசியல்வாதி:

"அரசியல்" என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாமல் வாழ்வது ஏன்?