Thursday, June 25, 2015

கத்தியில் பேசப்பட்ட கம்யூனிசம்

கத்தி திரைப்படத்தில் ஒரு காட்சி...
கம்யூனிசம்னா என்னன்னா...
உன் பசி முடிஞ்சதுக்கப்புறம்  நீ திங்குற ஒவ்வொரு  இட்லியும் உன்னுது இல்ல.
படம் பார்த்தவுடன் தோன்றிய விஷயம்
 - படம் நல்லா இருக்கு அப்படின்னு யாரவது ரெண்டாவது தடவ போயி டிக்கெட் வாங்க போனா இது உன் டிக்கெட் இல்லன்னு அனுப்புனா அந்த படம் சம்பந்தபட்டவர்கள் ஒத்துக்கொள்வார்களா ?
- இல்லாட்டி படம் 100 கோடி கலெக்சன்ஆயிடுச்சு இனி வர்ற கலெக்சன் எல்லாம் நம்மளுது இல்லைன்னு சொல்லி தியேட்டர்ல படத்தை தூக்கிடுவாங்களா ?

சரி நம்ம மேட்டர் அது இல்ல

எப்புடி பசி முடிஞ்சதுக்கப்புறம் நீ  திங்குற ஒவ்வொரு இட்லியும் உன்னுது இல்லையோ அதே மாதிரி தான், பசி முடிஞ்சதுக்கப்புறம் நீ வேஸ்ட் பண்ற ஒவ்வொரு தோசையும் உன்னுது இல்ல. மறைமுகமாய் யாருக்கோ போயி சேர வேண்டிய தோசைய நீ வேஸ்ட் பண்ற, அந்த தோசை சேர வேண்டிய ஆள  நீ பட்டினி போடுற. நீங்க சொல்லலாம் என் காசு என்னால சாப்பிட முடியல அதனால கொட்டுறேன்னு. எந்த ஒரு விவசாயியும் இதை நான் இவருக்காக தயார் செய்கிறேன்னு தயாரிக்கிறது இல்லை. விவசாயியோட வேல எல்லாருக்கும் உணவு கிடைக்கணும். இதுல ஏழை பணக்காரன்னு அவன் பார்க்குறதே இல்ல.  உனக்கு எது தேவையோ அத மட்டும் நீ வாங்கிக்கோ. தேவைக்கு அதிகமாய் வாங்கி வீண் செய்யாதே. யாராச்சும் ரெண்டு கார் வாங்கிட்டு ஒன்னு எனக்கு போதும் இன்னொன்னு வேணாம்னு மலையிலிருந்து தள்ளி விட்ற முடியுமா?..யாருகிட்டயாவது செகண்ட் சேல்ஸ் பண்றம்ல. அதே போலத்தான் சாப்பாட்டு விஷயத்துலயும் இருக்கணும்.சில பேர் டேஸ்ட் புடிக்கல அதனால கொட்டுறேன்னு சொல்லலாம். உனக்கு புடிக்காத காஸ்ட்லி மொபைல ஆத்துலய தூக்கி போடுற. OLX ல வித்துடுறல்ல....எனவே உணவையும் மதிக்கக் கத்துக்கங்க...ஏன்னா ஒவ்வொரு விவசாயியும் உணவைத் தயாரிப்பதை ஒரு தொழில் என்பதையும் தாண்டி அத ஒரு சேவையை தான் பார்க்குறான். அவனோட உழைப்புக்கு மரியாதை கொடுங்க. நீங்கள் தயாரிக்கும் ஒரு பொருள் தெருவில் நீங்கள் போகும்போது வீணாக்கப்பட்டு கிடந்தால் எப்படி வலிக்குமே அந்த வலியை அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள்.

இனி வரும் சந்ததியினருக்கும் சாப்பாட்டை வீணாக்க கூடாது என்ற கருத்தை விதையுங்கள்.





 

3 comments:

  1. adutha ten or fifteen years la unavu patra kurai aarampikkum ninaikkuren.
    appothu aavathu unavin mathippai unaruvarkalaa paarppom.


    yosikka vaitha-pathivu.
    thodarungal.
    mahesh,
    tirupati.
    www.tirupatimahesh.blogspot.com

    ReplyDelete
  2. இனி வரும் சந்ததியினருக்கும் சாப்பாட்டை வீணாக்க கூடாது என்ற கருத்தை விதையுங்கள்.

    ReplyDelete
  3. அன்புள்ள நண்பருக்கு,

    அதன் அர்த்தம் என்னவெனில் தேவைக்கு போக மீதியை சமூகத்துக்கு கொடுத்துடுங்கள் என்பதாகும் , ஒருத்தனுக்கு ஒரு வீடு குடியிருக்க போதும் பல பல வீடுகள் ஏன் ? என்பதுதான் கம்யூனிசம் அதை எளிமை படுத்தி அந்த படத்தில் சொல்லி இருக்கிறாங்க

    ReplyDelete