Saturday, June 27, 2015

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!!


அண்ணாவின் மனித நேயம்:

    அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும், அவரது இல்லத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்தனர்.உடனே அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

   "ஒருநாள் முழுவதும் காவலர்கள் எனது இல்லத்துக்கு முன்பாக நிற்பதை நான் விரும்பவில்லை. வேண்டுமானால் சாதாரண உடையில் ஒரு நாற்காலியில் அமரச் சொல்லுங்கள் போதும்" என்றார்.

    தான் முதல்வர் என்றாலும் தமது இல்லத்துக்கு நியமிக்கப்பட்ட சாதாரணக் காவலர்களைக் கூட கஷ்டப்படுத்த விரும்பாமல் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தினார் அண்ணா.
       - தினத்தந்தி சிறுவர் மலரில், அன்புச்செல்வன் வீரபாண்டி

எனது முன்னோடி :

   1908-1910-ம் ஆண்டுகளில் தூத்துக்குடியில் தேச விடுதலையை வலியுறுத்தி நடந்த பிரச்சாரங்களுக்கும் போராட்டங்களுக்கும் வ.உ.சி. தலைமையேற்று நடத்திய சமயம். ஒரு வட  இந்தியத் தலைவர் தூத்துக்குடிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "எனக்கு தாய்  நாட்டுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றக் காரணம் வ.உ.சிதம்பரம் தான். அவரது வாழ்க்கைப் பற்றிய பல செய்திகளை நான் பத்திரிகைகளில் படித்த பின்னர் தான் தேசியப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தேன்" என்று மனம் திறந்து பாராட்டினார். கூட்டம் முடிந்த பிறகு அத்தலைவர் வ.உ.சி வீட்டுக்கும் சென்று அவருக்கு கதராடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

  அந்த வட இந்தியத் தலைவர் யார் தெரியுமா?

  1950-ல் முதல் இந்திய ஜனாதிபதியான பாபு ராஜேந்திர வபிரசாத்துதான்.

- தினத்தந்தி சிறுவர் மலரில், அ. யாழினி பர்வதம், சென்னை - 78.

No comments:

Post a Comment