1) எவன் ஒருத்தனுக்கு படுக்கையில படுத்த உடனே தூக்கம் வருதோ அவன் தான் உலகத்துல நிம்மதியான மனுஷன்.
2) சிக்கன் சமைக்கிறப்ப இருக்கிற அந்த ஆர்வம் பாத்திரம் கழுவுறப்ப இருக்கிறதில்ல.
3) நாம் அடிமையாகி விடக்கூடாத ஒரு விஷயம், மின்சாரம். எதுக்கும் வீட்ல அம்மி,ஆட்டுகல், விசிறி மற்றும் மெழுகுவர்த்தி எல்லாம் தயாரா வச்சுக்குவோம்.
4) ஊர்ல உள்ளவங்க பேச்சோட பேச்சா வர்ற சில வார்த்தைகள் ,
- மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லை
- அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கான
- உனக்கு வாக்கப்பட்டு வந்த நாள் முதலா நான் என்னத்தைக் கண்டேன்
- நாயக் குளிப்ப்பாட்டி நாடு வீட்ல வச்சா இப்படி தான்
5) தமிழ் சினிமா இயக்குனர்கள் பற்றி ஒரு வரியில்,
ஒரே கதையை வேற வேற மாதிரி எடுத்தா அது - ஷங்கர்
ஒருத்தருக்கும் புரியாம எடுத்தா அது - கமல்
ஒருத்தனே வச்சே படம் எடுத்தா அது - வெற்றிமாறன்
ஒரே ஆளு படத்த எடுத்தா அது - விஜய டி . ராஜேந்தர்
சரக்கடிக்கிறதுக்கு நடுவுல படம் எடுத்தா அது - வெங்கட் பிரபு
குடும்ப கதையை படம் எடுத்தா - வீ சேகர்
குடும்பமே படம் எடுத்தா அது - ராஜா
ஆபாசம் இல்லாமல் படம் எடுத்தா அது - விக்ரமன்
ஆபாசத்துக்கு நடுவுல கொஞ்சம் படம் எடுத்தா அது - எஸ் ஜே சூர்யா
இருட்டுல படம் எடுத்த அது - மணிரத்னம்
இருட்டுல இருக்கிற விஷயத்தை வெளியில காட்டுனா அது - பாலா
அழகான தமிழ்ல டைட்டில் வச்சிட்டு அசிங்கம் அசிங்கமா ஆங்கிலத்தில்
பேசுன அது - கெளதம் மேனன்
படத்தில ஹீரோவ கத்தி கத்தி பேச வச்சா அது - ஹரி
ஊர் பேரையெல்லாம் டைட்டிலா வச்சா அது - பேரரசு
No comments:
Post a Comment