Saturday, June 27, 2015

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!!


அண்ணாவின் மனித நேயம்:

    அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும், அவரது இல்லத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்தனர்.உடனே அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

   "ஒருநாள் முழுவதும் காவலர்கள் எனது இல்லத்துக்கு முன்பாக நிற்பதை நான் விரும்பவில்லை. வேண்டுமானால் சாதாரண உடையில் ஒரு நாற்காலியில் அமரச் சொல்லுங்கள் போதும்" என்றார்.

    தான் முதல்வர் என்றாலும் தமது இல்லத்துக்கு நியமிக்கப்பட்ட சாதாரணக் காவலர்களைக் கூட கஷ்டப்படுத்த விரும்பாமல் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தினார் அண்ணா.
       - தினத்தந்தி சிறுவர் மலரில், அன்புச்செல்வன் வீரபாண்டி

எனது முன்னோடி :

   1908-1910-ம் ஆண்டுகளில் தூத்துக்குடியில் தேச விடுதலையை வலியுறுத்தி நடந்த பிரச்சாரங்களுக்கும் போராட்டங்களுக்கும் வ.உ.சி. தலைமையேற்று நடத்திய சமயம். ஒரு வட  இந்தியத் தலைவர் தூத்துக்குடிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "எனக்கு தாய்  நாட்டுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றக் காரணம் வ.உ.சிதம்பரம் தான். அவரது வாழ்க்கைப் பற்றிய பல செய்திகளை நான் பத்திரிகைகளில் படித்த பின்னர் தான் தேசியப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தேன்" என்று மனம் திறந்து பாராட்டினார். கூட்டம் முடிந்த பிறகு அத்தலைவர் வ.உ.சி வீட்டுக்கும் சென்று அவருக்கு கதராடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

  அந்த வட இந்தியத் தலைவர் யார் தெரியுமா?

  1950-ல் முதல் இந்திய ஜனாதிபதியான பாபு ராஜேந்திர வபிரசாத்துதான்.

- தினத்தந்தி சிறுவர் மலரில், அ. யாழினி பர்வதம், சென்னை - 78.

Friday, June 26, 2015

தமிழ் சினிமா இயக்குனர்கள் பற்றி ஒரு வரியில்,


1) எவன் ஒருத்தனுக்கு படுக்கையில  படுத்த உடனே தூக்கம் வருதோ அவன் தான் உலகத்துல நிம்மதியான மனுஷன்.

2) சிக்கன் சமைக்கிறப்ப  இருக்கிற அந்த ஆர்வம் பாத்திரம் கழுவுறப்ப இருக்கிறதில்ல.

3) நாம் அடிமையாகி விடக்கூடாத ஒரு விஷயம், மின்சாரம்.  எதுக்கும் வீட்ல அம்மி,ஆட்டுகல், விசிறி மற்றும் மெழுகுவர்த்தி எல்லாம் தயாரா வச்சுக்குவோம்.

4)  ஊர்ல உள்ளவங்க பேச்சோட பேச்சா வர்ற சில வார்த்தைகள் ,
        - மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லை
        - அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கான
         - உனக்கு வாக்கப்பட்டு வந்த நாள் முதலா நான் என்னத்தைக்  கண்டேன்
         - நாயக் குளிப்ப்பாட்டி நாடு வீட்ல வச்சா இப்படி தான்

5) தமிழ் சினிமா இயக்குனர்கள் பற்றி ஒரு வரியில்,
      ஒரே கதையை வேற வேற மாதிரி எடுத்தா அது - ஷங்கர்
      ஒருத்தருக்கும் புரியாம எடுத்தா அது - கமல்
      ஒருத்தனே வச்சே படம் எடுத்தா அது - வெற்றிமாறன்
      ஒரே ஆளு படத்த எடுத்தா அது - விஜய டி . ராஜேந்தர்
      சரக்கடிக்கிறதுக்கு நடுவுல படம் எடுத்தா அது - வெங்கட் பிரபு
      குடும்ப கதையை படம் எடுத்தா - வீ  சேகர்
      குடும்பமே படம் எடுத்தா அது - ராஜா
      ஆபாசம் இல்லாமல் படம் எடுத்தா அது - விக்ரமன்
      ஆபாசத்துக்கு நடுவுல கொஞ்சம் படம் எடுத்தா அது - எஸ் ஜே சூர்யா
      இருட்டுல படம் எடுத்த அது - மணிரத்னம்
      இருட்டுல இருக்கிற விஷயத்தை வெளியில காட்டுனா அது - பாலா
      அழகான தமிழ்ல டைட்டில் வச்சிட்டு அசிங்கம் அசிங்கமா ஆங்கிலத்தில்
      பேசுன அது - கெளதம் மேனன்
      படத்தில ஹீரோவ கத்தி கத்தி பேச வச்சா அது - ஹரி       
      ஊர் பேரையெல்லாம் டைட்டிலா வச்சா அது - பேரரசு
      

      
       
     

       
      
      

Thursday, June 25, 2015

கத்தியில் பேசப்பட்ட கம்யூனிசம்

கத்தி திரைப்படத்தில் ஒரு காட்சி...
கம்யூனிசம்னா என்னன்னா...
உன் பசி முடிஞ்சதுக்கப்புறம்  நீ திங்குற ஒவ்வொரு  இட்லியும் உன்னுது இல்ல.
படம் பார்த்தவுடன் தோன்றிய விஷயம்
 - படம் நல்லா இருக்கு அப்படின்னு யாரவது ரெண்டாவது தடவ போயி டிக்கெட் வாங்க போனா இது உன் டிக்கெட் இல்லன்னு அனுப்புனா அந்த படம் சம்பந்தபட்டவர்கள் ஒத்துக்கொள்வார்களா ?
- இல்லாட்டி படம் 100 கோடி கலெக்சன்ஆயிடுச்சு இனி வர்ற கலெக்சன் எல்லாம் நம்மளுது இல்லைன்னு சொல்லி தியேட்டர்ல படத்தை தூக்கிடுவாங்களா ?

சரி நம்ம மேட்டர் அது இல்ல

எப்புடி பசி முடிஞ்சதுக்கப்புறம் நீ  திங்குற ஒவ்வொரு இட்லியும் உன்னுது இல்லையோ அதே மாதிரி தான், பசி முடிஞ்சதுக்கப்புறம் நீ வேஸ்ட் பண்ற ஒவ்வொரு தோசையும் உன்னுது இல்ல. மறைமுகமாய் யாருக்கோ போயி சேர வேண்டிய தோசைய நீ வேஸ்ட் பண்ற, அந்த தோசை சேர வேண்டிய ஆள  நீ பட்டினி போடுற. நீங்க சொல்லலாம் என் காசு என்னால சாப்பிட முடியல அதனால கொட்டுறேன்னு. எந்த ஒரு விவசாயியும் இதை நான் இவருக்காக தயார் செய்கிறேன்னு தயாரிக்கிறது இல்லை. விவசாயியோட வேல எல்லாருக்கும் உணவு கிடைக்கணும். இதுல ஏழை பணக்காரன்னு அவன் பார்க்குறதே இல்ல.  உனக்கு எது தேவையோ அத மட்டும் நீ வாங்கிக்கோ. தேவைக்கு அதிகமாய் வாங்கி வீண் செய்யாதே. யாராச்சும் ரெண்டு கார் வாங்கிட்டு ஒன்னு எனக்கு போதும் இன்னொன்னு வேணாம்னு மலையிலிருந்து தள்ளி விட்ற முடியுமா?..யாருகிட்டயாவது செகண்ட் சேல்ஸ் பண்றம்ல. அதே போலத்தான் சாப்பாட்டு விஷயத்துலயும் இருக்கணும்.சில பேர் டேஸ்ட் புடிக்கல அதனால கொட்டுறேன்னு சொல்லலாம். உனக்கு புடிக்காத காஸ்ட்லி மொபைல ஆத்துலய தூக்கி போடுற. OLX ல வித்துடுறல்ல....எனவே உணவையும் மதிக்கக் கத்துக்கங்க...ஏன்னா ஒவ்வொரு விவசாயியும் உணவைத் தயாரிப்பதை ஒரு தொழில் என்பதையும் தாண்டி அத ஒரு சேவையை தான் பார்க்குறான். அவனோட உழைப்புக்கு மரியாதை கொடுங்க. நீங்கள் தயாரிக்கும் ஒரு பொருள் தெருவில் நீங்கள் போகும்போது வீணாக்கப்பட்டு கிடந்தால் எப்படி வலிக்குமே அந்த வலியை அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள்.

இனி வரும் சந்ததியினருக்கும் சாப்பாட்டை வீணாக்க கூடாது என்ற கருத்தை விதையுங்கள்.





 

நல்லதே நினை... நல்லதே பேசு.. நல்லதே நடக்கும்..26/6/2015

1)  நம்ம கைல இருக்கிற  குடை மாதிரி தான் நம்ம மனசையும் வச்சுக்கணும். மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் குடை தன் நிலை மாறுவதில்லை.

2) நாளைக்கு பண்ணவா? அப்படினு கேட்குற கேள்வியிலேயே தெரிஞ்சுக்கலாம் அவங்களுக்கு அந்த வேலையில இருக்கிற ஆர்வம்.

3) களவும் கற்று மற -
     களவு - திருட்டு , கல் - பொய்
     களவும் கற்றும்(கல்லும் என்பதன் மறுஊ சொல் ) மற.

4) எல்லாருக்கும் நல்லவனா இருக்க முயற்சி செய்யாதிங்க...ஏன்னா நம்மள சுத்தி  இருக்கிற எல்லாரும் நல்லவங்க கிடையாது.

5) மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது. புகைப் பிடித்தல் புற்று
    நோயை உண்டாக்கும்  .
    வடிவேல் வசனம்...அப்புறம் தம்பி நான் சிரிப்பா சொன்னதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க...ஹைய்யோ ...ஹைய்யோ...

6) சந்தர்ப்பங்களை தேடி அலைய வேண்டாம். கிடைச்ச சந்தர்ப்பத்தை நழுவ விடாம ஜெயிக்கிறது தான் புத்திசாலித்தனம்.

7) எல்லா ஊர்லயும் 100 நாள் வேலை ஒழுங்கா நடந்திருந்தா எல்லா கிராமமும் நீங்க நினைக்கிற கனவு கிராமமா மாறியிருக்கும்.


   

Tuesday, June 23, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 24/06/2015


1) ஏம்பா உன் உயிரைக் காப்பாத்த அரசாங்கம்தான் சட்டம் கொண்டு வரணுமா. அட்லீஸ்ட் அந்த சட்டத்தையாவது மதிக்கலாமே...ஹெல்மெட் அவசியம், உனக்காக இல்லாட்டியும் உன் குடும்பத்துக்காக.

2) அடுத்தவங்களை இடையூறு செய்யாமல் வாழ்ந்தாலே வாழ்க்கை சந்தோசமா போகும். அட, உங்களுக்கு இல்லாட்டியும் அடுத்தவங்களுக்காவது.

3) நீதி,நேர்மை, நியாயம் எல்லாம் நம்ம புத்திக்கு புடிக்கும், மனசு யோசிக்கும் ஆனா நடைமுறை வாழ்க்கை கண்டுக்கவே கண்டுக்காது.

4) அன்று: குறுவையில போன தாளடியில பார்த்துக்கலாம்
     நேற்று: மார்ச்சுல போன ஆண்டவன் கொடுத்த அக்டோபர்ல
     பார்த்துக்கலாம்.
     இன்று: த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.

5) இந்தியாவோட பெரிய பலமே MANPOWER தான். அதுக்கு ரொம்ப முக்கியம் நம்மோட உடல் ஆரோக்கியம். அதனால நல்லதா சாப்பிடுங்க. ஏன்னா சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்.

6) மோடி அடிக்கடி வெளிநாடு போயிடுறார்.
     ஏம்பா உனக்கு ஒரு வாய்ப்பு வருது, நீ எந்த நாட்டுக்கு வேணும்னாலும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல், துளி செலவும் இல்லாமல், அதுவும் முழு பாதுகாப்போட நாடு சுத்திப் பார்க்கலாம்னா...நீ போக மாட்ட ...சொல்லுப்பா...

7) இந்த வலைதள நண்பர்களுக்கு கலாய்க்க சீசனுக்கு ஒரு ஆள் மாட்டுவாங்க...ஆனா அவங்களோட எல்லா சீசனுக்கும் மாட்டுற எவர்க்ரீன் ஆள் நம்ம கேப்டன் தான்...இப்போ யோகா வீடியோ தாறுமாறு ஹிட்டாம்.

குறிப்பு : நாளையிலேருந்து "என்னம்மா இப்படி பண்றிங்களம்மா" தலைப்பை மாத்தலாம்னு இருக்கேன்.

Monday, June 22, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 23/06/2015


1)  எல்லாத்துக்கும் DUPLICATE போடுவான் சீனாக்காரன் ஆனா அவனோட நுடுல்ஸ்கே DUPLICATE போட்டான் பாரு ஒருத்தன்.

2) நம்ம ஊருல உசுர காப்பாத்துற ஆம்புலன்ஸ் கூட சாலை விதிகளை மதிப்பாங்க. ஆனா இந்த ஆட்டோ காரங்கள கேட்க ஆளே இல்ல.

3)  வண்டி ஓட்ட மொத நல்ல ரோடு இல்ல ...அப்படியும் ரோடு நல்லா இருந்தா அங்க ஓட்ட இடம் இல்ல...அதையும் மீறி ஒட்டிக்கிட்டு போன RTO செக்கிங். ஒரு நாட்டுல இருந்துகிட்டு எல்லா ஸ்டேட் க்கும் வரி கட்டணும்ன எப்புடி. #ONE INDIA ONE BORDER.

4) இந்த நாட்டுல கொலை பண்ணவன் கொள்ளை அடிச்சவன் எல்லாம் சந்தோசமா வண்டி ஓட்டுறானுக. ஆனால் NON - KA  registration வச்சிருக்கவன் பெங்களூர் ல வண்டி ஓட்டுறது உயிரை கைல புடிச்சிகிட்டு தான் ஓட்ட வேண்டியிருக்கு.

5) சாப்பாட்டை பொறுத்த வரை சுவையும் ஆரோக்கியமும் புருஷன் பொண்டாட்டி மாதிரி,  ரெண்டும் ஒத்தே போகாது. ரெண்டும்  ஒத்துப் போறது சாப்பாடுன்னா வீடு. இன்னொன்னு உங்களுக்கு தெரியாதது இல்ல....

6) முதலில் ஓலை, அப்புறம் புறா, பிறகு கடிதம், தந்தி, டெலிபோன்,செல்போன்,ஈமெயில்,SMS,Whatsup இப்படி தகவல் தொடர்பு துறை பெரும் வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு சேதிய நேர்ல சொல்றப்ப வர்ற அந்த தவிப்பு,ஏக்கம்,மகிழ்ச்சி,சோகம்,பூரிப்பு,ஆவல் இதெல்லாம் அதுல எல்லாம் வர்றதில்ல.

7) தேவை இல்லாதை எல்லாம் மக்க வைத்து விட்டு விதையை மட்டும் விருட்சமுற செய்யும் பூமி ஒரு தாய்தான்.






Sunday, June 21, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 22/06/2015


1)  மனைவி: என்னங்க DINNER க்கு Maggie ஓகே வா?
     கணவன்: Maggie சாப்பிடக் கூடாதாம். நியூஸ் பார்க்கலையா?
     மனைவி: அப்போ உப்புமா ஓகே வா?
     கணவன்: போற உயிர் Maggie லயே போகட்டும் விடு.

2)  நீ எப்படி கேட்காம வாழப் பழகிட்டியோ அதே போல தான் அவங்களும் கொடுக்காம  வாழப் பழகிட்டாங்க.

3) 1000 ரூபாய் கொள்ளையடிச்சவன சும்மா விட்டுட்டு 100 ரூபாய் கொள்ளையடிச்ச ஆள உள்ள துக்கிபோடுறது என்னய்யா நியாயம்னு சொல்ற அளவுக்கு பேசுறது தான் இப்போ நம்மோட சுதந்திரம்.

4) இனி பள்ளிக்கூடத்துல நீதிக்கதைகள், நேர்மை, நியாயம், ஒழுக்கம் இவைகளைப் பற்றி சொல்லி கொடுக்காதிங்கப்பா. தேவைப்படாததை படிச்சு அவன் என்னய்யா பண்ணப் போறான்.

5)  போற போக்க பார்த்தா விஷால அடுத்த CM ஆக்கி விட்டுருவாங்க போல...

6)  கிரிக்கெட், ஜூடோ, கால்பந்து, டென்னிஸ், இசை  இந்த வரிசையில் குழந்தைகளுக்கு கொஞ்சம் விவசாயமும் சொல்லி கொடுங்க..

7) என்னன்னாம்மோ எல்லாம் ஆன்லைன்ல வந்திடுச்சு...இனி விவசாயி தயாரிச்ச பொருளை நேரடியா கஸ்டமர்ஸ் கிட்ட சேர்க்குற நேரம் வந்துடுச்சு...எத்தனை காலம் தான் தரகர்கள் கிட்ட ஏமாறுறது.


 

Saturday, June 20, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 20/06/2015

1)  நாம யாரையாவது நல்லா இருக்கியான்னு கேட்டா, ஏதோ இருக்கேன்னு சொல்றவங்க கண்டிப்பா நம்மகிட்ட ஏதோ எதிர்பார்க்குறாங்க இல்லாட்டி அவங்க எதிர்பார்த்த ஒன்ன நாம நிறைவேற்றலன்னு அர்த்தம்.

2)  ஒரு நல்ல உணவுண்ணா காலையில் சமைச்சா இரவுல கெட்டுப் போயிடனும்.

3) ஒரு கடி ஜோக் :
    ரெண்டு யானை படம் பார்க்க போக பஸ்ல போயிக்கிட்டு இருந்துச்சாம். கொஞ்சம் தூரம் போனவுடன் அந்த ரெண்டு யானையும் பஸ்ஸ விட்டு இறங்கிடுச்சாம். ஏன் ?
  ஏன்னா அவங்க பார்க்க போன அந்த படத்த அந்த பஸ்லேயே போட்டுடாங்களாம்....(வன்முறை வேண்டாம் ப்ளீஸ் ...)

4)  மீசை Vs தாடி
     நானும் நீயும் ஒன்றாகத்தான் பிறந்தோம். நீ மட்டும் வீரத்திற்கு நான் சோகத்திற்கா...முகத்திலும் கூட இத்தனை முரண்பாடுகளா?

5) நம்ம வாழ்க்கை உணவு முறையும் ரஜினி படம் போல தான்
    ரஜினி படம் : தொடக்கத்தில் பணக்காரனாக ஆரம்பித்து இடையில் ஏழையாகி இறுதியில் பணக்காரனாவது.
   நம் உணவு முறை - தொடக்கத்தில் நம் பாரம்பரிய உணைவை சாப்பிட்டு விட்டு இடையில் பீட்சா பர்கர் சாப்டிட்டு இறுதியில் மறுபடி நம் பாரம்பரிய உணவுக்கு வருவது.

6) நம்ம ஊர்ல ஒரு பழமொழி உண்டு . மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று. ஆனால் நம்ம தலைவர்கள் ஒரு படி மேலே போய் மீன வறுத்துக் கொடுத்து விடுவார்கள். என்ன, வறுத்த மீன் 5 வருசத்துக்கு ஒரு தடவ,  இல்லாட்டி அப்பப்போ நடக்குற இடைத் தேர்தல் சமயத்துலதான் கிடைக்கும்.

7) ஆர்.கே  நகர் தொகுதியில் ட்ராபிக் ராமசாமி அவர்கள் ஜெயிச்சுட்டா ?
யார்   யார் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்?  கமெண்ட் ல சொல்லுங்களேன்?

நான் ஒருத்தரோட மைண்ட் வாய்ஸ் சொல்றேன்
நீதிபதி குமாரசாமி: இதுக்கு நீ உள்ளேயே இருந்துருக்கலாம்...

Friday, June 19, 2015

மண்வாசம் - அத்தை திருவிழாவுக்கு வந்திடுங்க. வரும்போது அத்தாச்சியையும் கூட்டி வந்திடுங்க



கோயில் திருவிழா...ப்பா இந்த வார்த்தைய கேட்டாலே அப்பல்லாம் உடம்பே சிலிர்க்கும்...உடம்பு மனசு ரெண்டும் சேர்ந்து ஆட ஆரம்பிச்சுடும்...ஏன் இப்ப கூட ஒரு புது feel தான் இருக்கும்.

எங்க ஊர் மற்றும் ஊர  சுத்தி உள்ள பல கிராமங்களில் பல கோவில்கள் உண்டு. தை மாசம் ஆரம்பிச்சதிலேருந்து ஒவ்வொரு கோயில் திருவிழாவும் ஆரம்பிச்சுடும். மனசும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுடும்.

என்ன தான் கஷ்டப்பட்டாலும் திருவிழான்னு வந்துட்டா நம்ம ஊரு ஆளுங்க எப்படியாவது சிறப்பா செய்யனும்னு முனைப்பா இருப்பாங்க.ஏன்னா திருவிழான்னு வந்துட்டா வீட்ல பல செலவு இருக்கு. கோயில் வரி, சொந்தகாரங்க எல்லாம் வந்தா அவங்களுக்கு விருந்து, வீட்ல எல்லாருக்கும் புது துணிமணிகள், சாமிக்கு படைக்குரதுக்கு ஆகும் செலவுன்னு ஒரு லிஸ்டே நீளும். ஆனா இத்தனை செலவையும் மீறி மனசுக்குள்ள ஒரு பக்தி கலந்த மகிழ்ச்சி இருக்கும்.நம்ம படைச்ச சாமிக்கு நாம நன்றி கடன் செலுத்துற மாதிரிதான் ஒவ்வொருவரும் பய பக்தியோட கும்பிடுவாங்க.

அது எல்லாம் பெரியவங்க டிபார்ட்மெண்ட். நாம நம்ம விசயத்துக்கு வருவோம்.

கோயில் திருவிழா காப்பு கட்டறதுல ஆரம்பிக்கும். காப்பு கட்டியாச்சுன்னா யாரும் ஊர  விட்டு வெளிய போக கூடாது.பக்கத்து ஊர் சாவுக்கு கூட போக மாட்டாங்க.திருவிழா முடிஞ்சதுக்கப்புறம் தான் போவாங்க.அவ்வளவு கட்டுப்பாடா இருக்கும்.
அப்புறம் திருவிழாவுக்கு தேவையான PURCHASE ஆரம்பிக்கும்.எல்லாம் பக்கத்துல உள்ள டவுனுக்கு போயிதான் வாங்க போவாங்க. சில பேர் பஸ்ல போவாங்க.இல்லாட்டி சில பேர் மாட்டு வண்டி பூட்டிகிட்டு 2,3 குடும்பமா போவாங்க.போயி, அரசாமன், பூஜை சாமான்,துணிமணி மற்றும் சொந்தக்காரங்க வந்தா படுக்குறதுக்கு பாய் எல்லாம் வாங்கிகிட்டு வருவாங்க.

அப்புறம் சொந்தகாரங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போயி நேரடியா அழைக்க போவோம். சில பேர் அவங்க வீட்ல இருக்க சின்ன பிள்ளைங்கள அழைக்க போறப்பவே கூட்டிட்டு வந்துடுவாங்க.பெரியவங்க வயல் வேலைய முடிச்சிட்டு மொத நாளோ அல்லது திருவிழா அன்னைக்கோ வர்றேன்னு சொல்லி அனுப்புவாங்க. சின்ன பசங்க டிரஸ் மற்றும் பள்ளிகூட பை எல்லாம் எடுத்துகிட்டு கிளம்பிடுவாங்க.பள்ளிக்கூடம் பக்கத்துல இருந்தா திருவிழா முடியிற வரைக்கும் சில பேர் இங்கேயிருந்தே போவாங்க.

திருவிழா ஒரு வாரத்துக்கு மேல நடக்குமா..அதனால வீட்லேயே நிறைய பலகாரங்கள் தயார் பண்ணி வச்சுக்குவோம் .

தினமும் இரவில் நாடகம், திரையில் சினிமா, கரகாட்டம் அப்புறம் பாட்டு கச்சேரி எல்லாம் நடக்கும். கோயில ஒட்டி நிறைய கடை போட்டு இருப்பாங்க.
டி கடை, புரோட்டா கடை, பலகாரக் கடை, வளையல் மணி கடை,பலூன்  கடை அப்புடின்னு நிறை கடைகள் இருக்கும்.பக்கத்து ஊர் நண்பர்கள் வந்தா அவர்களுக்கு டீ மற்றும் பலகாரங்கள் வாங்கி தருவது நமக்குள்ளே ஒரு ஆனந்தம்.

இரவு நிகழ்ச்சி பார்க்க போறதுக்காக கோயில்ல உட்கார இடம் புடிக்க வீட்ல உள்ள சின்ன பசங்க கிட்ட 4,5 பாயை கொடுத்து அவங்கள போயி இடம் பிடிக்க சொல்லி 6 மணிக்கு எல்லாம் அனுப்பி வச்சிருவாங்க. அவங்க போயி அங்க பாயை போட்டு இடம் பிடிச்சிட்டு ஒரே ஆட்டமா தான் இருக்கும். அங்க இடம் பிடிக்கிறதுக்கும் ஒரே சண்ட தான் நடக்கும்.கோயில் பக்கத்துல உள்ளவங்க நடந்தே போயிடுவாங்க. கொஞ்சம் தூரமா இருந்தா மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. பசங்க எல்லாம்  தீப்பந்தம் கொளுத்தி கிட்டு நடந்தே போவோம். சைக்கிள் இருக்கவங்க சைக்கிள்ள வருவாங்க. அந்த சைக்கிளை எல்லாம் பாதுகாக்க சைக்கிள் ஸ்டான்ட் ஏலம் எடுத்து வச்சிருப்பாங்க.

மாமா,சித்தப்பா எல்லாம் சின்ன பசங்களுக்கு காசு கொடுப்பாங்க  இல்லாட்டி பலூன், மிக்சர், ஸ்வீட் இப்படி ஏதாவது வாங்கி கொடுப்பாங்க.

பசங்க எல்லாம் கூட்டம் கூட்டமா சேர்ந்துகிட்டு தங்க மனசுக்கு பிடித்த பொண்ணுங்க உட்கார்ந்து இருக்க இடத்துல போயி நின்னுகிட்டு ஒரே சீன இருக்கும்.பொண்ணுங்களும் பயங்கரமா டிரஸ் பண்ணிட்டு புல் மேக்கப் ல தேவதை மாதிரி வந்திருப்பாங்க.யாராச்சும் சின்னப் பசங்க மூலமா வளையல் மணி எல்லாம் வாங்கி குடுத்துடுவானுக. அவங்க அத போட்டுக்கிட்டு பசங்க முன்னாடி நடந்து போவாங்க. அப்போ நம்ம பய மனசுல ஆயிரம் பட்டம்பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சுடும்.

 சீட்டாட்ட கிளப் ஏலம் எடுத்து நைட் புள்ள அது தனியா நடந்துகிட்டு இருக்கும்.

அந்த காலத்துல எனக்கு நாடகம் னா பிடிக்காது.ஒவ்வொரு கோயில்லையும் atleast 2 நாடகமாவது நடக்கும். அதுல முக்கியமா வள்ளி திருமணம்  மற்றும் அரிச்சந்திரா தான் எல்லா ஊர்லயும் போடுவாங்க. நாடகம் போடுற ன்னைக்கு அதிகம் இளைஞர்களை பார்க்க முடியாது. ஆனா வயசானவங்க நிறைய இருப்பாங்க.

நிகழ்ச்சிய பாதில நிறுத்திட்டு வானவேடிக்கை நடக்கும். ஒவ்வொரு ஊர்க்காரங்களும் அவங்கவங்க வெயிட் காட்டுறதுக்கு செம கலர்புல்லா நடத்துவாங்க.

தினமும் ஸ்பீக்கர் செட், tube லைட் வீதி முழுவதும் காட்டி செம அமர்க்களமா  இருக்கும். பத்தாததுக்கு அலங்கார லைட் கட்டி சாமிய நல்ல அலங்கரிச்சிருக்கும்.

நைட்ல சின்ன புள்ளங்க எல்லாம் நிகழ்ச்சி பாதியிலேயே தூங்கிடும். அவங்கள கெளப்பி வீடு கொண்டு போயி சேர்க்கிறதுக்குள்ளே பெரியவங்களுக்கு பாடாய் போயிடும். இன்னும் சில பேர் நைட் அங்கேயே தூங்கிடுவாங்க. காலையில 7 மணி வாக்குல அந்த பக்கம் போனமுன்னா திட்டு திட்டா அங்காங்கே 10 தலைகள் தூங்கிகிட்டு இருக்கும் சூரியன் அடிக்கிறதுகூட தெரியாம.

   - திருவிழா நினைவுகள் தொடரும் அடுத்த பதிவில்






ஆரோக்கியமாக வாழ எளிதான சில நடைமுறை பழக்கங்கள்


 - காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள பழகுங்கள்
- தினமும் வெறும் வயிற்றில் உங்களால் முடிந்த அளவு தண்ணீர் குடியுங்கள்
- தினமும் காலையில் குறைந்தது 1/2 மணி நேரம் நடக்கவும்.முடிந்தால் ஓடலாம்.
 - காலை உணவு 8-8:30 மணிக்குள், மதிய உணவு 12.:30-1:00 மணிக்குள் மற்றும் இரவு உணவு 7:30-8:00 மணிக்குள் எடுத்துக்கொள்ள பழகுங்கள்.
- முடிந்த அளவு சாப்பிடும்போது தன்னிற் எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.அது செரிமானத்துக்கு தடையாக இருக்கும்.
- வாரம் இருமுறை எதாவது ஒரு கீரை எடுத்துகொள்ளுங்கள்.தண்டு கீரை, சிறு கீரை, வெந்தய கீரை, முருங்கை கீரை இவற்றில் எதையாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாள் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது எடுத்துக் கொள்ளுங்கள் .
- எப்போதும் போல அரிசி & உளுந்து மாவு தோசைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் கம்பு தோசை, கேழ்வரகு தோசை, கோதுமை தோசை இவைகளையும் முயற்சி செய்யுங்கள்.
- சாயந்தர வேளையில் பஜ்ஜி, வடை எடுத்துக் கொள்ளும் வேளையில் சில நாட்கள் கொண்ட கடலை, அவித்த சோளம், அவித்த கடலை, பச்ச பயிறு இவைகளில் ஏதாவது ஒன்றை சாப்பிடவும்.
- முடிந்தளவு கோக், பெப்சி குடிப்பதை தவிர்க்கவும். பதிலாக இளநீர்,எலுமிச்சை சாறு, மோர் இவைகளை குடிக்கவும்.
- PIZZA & BURGER இவைகளை உடனே நிறுத்த சொல்லல கொஞ்சம் குறைச்சுக்கங்க.
- கருவேப்பிலை, முடக்கத்தான், தூதுவளை இவைகளை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.(இதெல்லாம் கடைகளில் கிடைக்காது நம் வீட்டில் பால்கனியில் அல்லது மொட்டை மாடியில் வளர்க்கலாம்)
- தினமும் 1/2 மணி நேரம் உங்க மனசுக்கு புடிச்சத செய்ங்க. நல்ல விசயங்களை உங்க மனசுக்கு புடிச்சதா வச்சுக்குங்க.
 - தினமும் குறைஞ்சது 7 மணி நேரம் துங்குங்க. குறிப்பா துங்க வேண்டிய நேரத்துல துங்குங்க.
- எக்காரணத்தைக் கொண்டும் ஆபீஸ் வேலையை ஆபீஸ் லேயே  முடிச்சுருங்க. வீட்டுக்கு வேலைய எடுத்துட்டு வராதிங்க.
- வாரத்துல ரெண்டு நாள் (சனி, ஞாயிறு )குடும்பத்தை பக்கத்துல உள்ள பார்க்குக்கு கூட்டிட்டு போயி ஒரு 1 மணி நேரம் செலவிடுங்கள். சம்பாரிக்குறது யாருக்கு சார் குடும்பத்துக்குத் தானே.
- மாசத்துல ஒரு தடவ அல்லது ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ ஏதாச்சும் ஒரு விசயத்துல கஷ்டபடுறவங்களுக்கு உங்களால் முடிஞ்ச சின்ன உதவிய அவங்களுக்கு நீங்களே நேரடியா பண்ணுங்க.
- வீட்டுக்கு வர்றவங்க கிட்ட பேசும்போது டிவிய கொஞ்சம் ஆப் பண்ணிடுங்க.
- வருசத்துக்கு ஒரு தடவையாவது எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும்  போங்க.
- எவ்வளவு கஷ்டம் வந்தாலும் "இதுவும் கடந்து போகும்"னு மனச தேத்திக்குங்க.
 - நல்லதே நினைங்க நல்லதே பேசுங்க நல்லதே நடக்கும்.





Thursday, June 18, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 19/06/2015

1)   கணவன்: டார்லிங்! இன்னைக்கு அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?
      மனைவி:ஆமாங்க!!! உங்களுக்கு எப்படி தெரியும் ?
      கணவன்: வர்ற வழியில  செத்து கடந்துச்சு அதான்   கேட்டேன்.
      மனைவி: .....

2)    நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை...என்ன,  அந்த நாலு   
       பேரும் நம்ம வீட்டு ஆளா இருக்கக்கூடாது.

3)   கார்பரேட் நிறுவனங்கள் வருகையால் நாம் தொலைத்த  நம்ம ஊர்  நல்ல 
      விஷயங்களில் ஒன்று  ஆயில் மில் &  மாவு மில். ரீபைண்ட் ஆயில
      கொடுத்து கொன்னுகிட்டு இருக்காங்க.

4)    எந்த நடிகர்/நடிகையாச்சும் நான்தான் அழகுன்னு ஆணவத்தோட
       அலைஞ்சா நேரா அவுங்கள பாலா படத்துல நடிக்க விட்டுடுங்க மீதிய
       அவர் பார்த்துப்பார்.

5)    ஆபிசில விசமத்தனம் பன்றவன அரசியல் பன்றான்னு சொல்றோம்.
      ஆனா    நல்ல அரசியல்வாதி கிடைக்க மாட்டேங்குறான்னு
      அழறோம்..கொஞ்சம் முரண்பாடா தெரியுதுல்ல....

6)    சினிமாவுல யதார்த்தமாக நடிக்கிறவனும்...வாழ்க்கையில
       சினிமாத்தனமாக இருப்பவனும் தான் ஜெயிக்கிறான்.
        


Wednesday, June 17, 2015

சினிமாவும் நானும் - மனதைக் கவர்ந்த வசனங்கள்


சம்சாரம் அது மின்சாரம்:
=======================
 லக்ஷ்மி: ஆம்பளையா பிறந்த ஒருத்தன்  ரெண்டு விசயத்துக்கு கணக்கு பார்க்கக் கூடாது. ஒன்னு, பெத்தவங்களுக்கு போடுற சோறு இன்னொன்னு கூடப் பொறந்தவளுக்கு  சீரு.

தேவர் மகன்:
============
கமல்:   மெதுவான்னா  எம்புட்டு மெதுவாய்யா அதுக்குள்ளே நான் செத்துருவேன்   போலிருக்கே...

சிவாஜி: போ...செத்துப்போ...நான் தடுக்க முடியுமா..எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு சாக வேண்டியது தான்.வாழ்றது முக்கயந்தான் இல்லன்னு சொல்லல..ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கைய வாழ்ந்துட்டு போறதுதான் அந்த சாவுக்கு பெருமை. வெத வெதச்ச உடனே பழம் சாப்பிடனும்னு நினைக்க முடியுமோ..இன்னைக்கி நான் விதிக்கிறேன் நாளைக்கு நீ பழம் சாப்பிடுவா ...அப்புறம் உன் மவன் சாப்பிடுவான்...அதுக்கு அப்புறம் அவன் மவன் சாப்பிடுவான்.அதெல்லாம் இருந்து பார்க்கிறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத நான் போட்டது . இதெல்லாம் எனக்கு பெருமையா ...கடமை ஒவ்வொருத்தருடைய கடமை.


தேவர் மகன்:
============
நாசர் : ஊருல மொதல்ல சத்தமா பேசுறவன் பேச்சுதான் நியாயமா போகுது , அதுல நெசம் செத்துப்போகுது.

எந்திரன்:
=========
கேள்வி:கடவுள் இருக்கறா ?
ரோபோ ரஜினி: கடவுள்னா யாரு?
கேள்வி கேட்டவர் :நம்மை படச்சவரு .
ரோபோ ரஜினி:  என்னை படைச்சது டாக்டர் வசீகரன். கடவுள் இருக்காரு.

ரமணா:
=======
 ரவிச்சந்திரன் : ஒரு மனுஷன் செத்தா அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன் . அவன் மனைவி அழுதா அவன் ஒரு நல்ல கணவன் . அவன் புள்ளைங்க அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன் . அவனுக்காக இந்த ஊரே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன் . உனக்காக இந்த ஊரே அழுகுதப்பா ....என் பேத்தி சாப்பிட்டு 2 நாள் ஆச்சு.
 
ரமணா:
=======
போலீஸ்: அவன் யாருன்னே உனக்கு தெரியாது. அவனுக்காக உன் மகன  அடி வாங்க சொல்லுற. அவன இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கியா ...அவன முன்ன பின்ன தெரியுமா?
 அந்த மகனின் தாய்: நீ கடவுள பார்த்து இருக்கியா ....

புதிய வார்ப்புகள்:
================
பாக்யராஜ்: என்னடா தம்பி (மாணவன் பேரு மறந்துட்டேன் )  எப்புவுமே லேட்டா வருவா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட.
மாணவன் : எப்புதும் எங்க அம்மா எனக்கு வேல சொல்லும் அத செஞ்சுட்டு வர லேட்  ஆகிடும். நேத்து எங்க அம்மா செத்து போச்சு.

அன்பே சிவம்:
=============
கமல்: யாருன்னே தெரியாத ஒருத்தருக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்தனும்னு துடிக்கிற அந்த மனசு இருக்கே அது தான் சார் கடவுள்.

மகாநதி :
========
கமல்: ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு கெடச்சுருதே...அது எப்புடி?

சூர்யவம்சம்:
============
சரத்குமார்: உளி படும்போது வலின்னு அழுத எந்த கல்லும் சிலையாகாது ...ஏர் உழுவும் போது கஷ்டம்னு நெனைக்கிற எந்த நிலமும் வெளஞ்சு நிக்காது...அது மாதிரி அப்பா அம்மா   கோபப்படுறதையும் திட்டுறதையும் தப்புன்னு நெனைக்கிற எந்த புள்ளையும் முன்னுக்கு வரமுடியாது.

சதுரங்க வேட்டை:
==================
நடராஜ்:ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது. அவனோட ஆசைய  தூண்டனும்.









Tuesday, June 16, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 17/06/2015

1)  சூர்யா எத்தனை FLOP கொடுத்தாலும் அஜித் விஜய் போல அசிங்கப்படுறதில்ல...எல்லா புகழும் டைரக்டர்ஸ்கே போயி சேர்ந்துடுது...(லிங்குசாமி : Why Blood   வெங்கட் பிரபு: Same Blood)

2)  விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேர 90 சீட் கேட்டராமே? ..இங்கேயும் 90 யா?

3) பெங்களூர் ல 2 விஷயம் அதிகம் ஒன்னு இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ் இன்னொன்னு தெரு நாயி. என்ன, ரெண்டு பேரு பொழப்பும் ஒரே பொழப்பு தான்.

4)  செல்போன் ஈமெயில் இல்லாத காலத்துல தான் நம்ம உறவுமுறைகள் நல்லா இருந்துச்சு....ஹ...லோ...ஹ...ஒன்னும் கேட்கல.

5)  நல்ல தலைவர்களே கிடைக்க மாட்டாங்களா?...அப்போ நீங்க அம்மாவுக்கு பால் குடம் எடுக்காதவரா?

6) எருமைச் சாணிய மட்டும் போட்டு ஏக்கருக்கு 40 மூட்டை நெல் அடிச்ச காலம் போயி இன்னைக்கு கண்ட கண்ட   எழவெல்லாம் போட்டும் 25 மூட்டை கூட வரமாட்டேன்குது.

7) அடி உரம்னா, அப்புறம் யூரியான்னா, அப்புறம் கதிர் உரம்னா, இப்போ பார்த்தா களை  கொல்லி, மைக்ரோ food, தண்டு பூச்சி கொல்லி, இலை பூச்சி கொல்லி, பயிர் பூச்சி கொல்லி, வேர் பூச்சி கொல்லி, மண் பூச்சி கொல்லி, அப்புறம் கேப்டன் சொல்ற மாதிரி வாயில நல்லா வருது வேணாம் ....இத்தனையும் போட்டு அத ஒண்ணா கொழச்சு சாப்பிட்ட இந்த உடம்பு என்னாத்துக்குய்ய ஆகுறது .










ஞாபகம் வருதே - நாளைக்கு நாங்க நெல் அரைக்க போறோம்

சின்ன வயசுல நெல்ல அரைச்சு அரிசியாக்குறது ஒரு 5 நாள் வேலை. அதுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேலை இருக்கும். இந்த Processa பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம்  ஒன்னு சேர்ந்து பண்றப்போ இன்னும் interestinga இருக்கும்.
முதல் நாள் எல்லாரும் சேர்ந்து நெல் அவிக்கிறதுக்கு தேவையான காய்ஞ்ச சருகுகளை பொறுக்க எதாவது ஒரு ஆரஸ்பதி தோப்புக்கு போவோம். எல்லோரும் ஆளுக்கு 3-4 சணல் சாக்கு எடுத்துக்கிட்டு போயி  சருகுகளை அள்ளிக்கிட்டு வருவோம். அந்த சருகுகளை அள்ளுவதே ஒரு பெரிய கலைதான். முட்டு முட்டாக ஒதுக்கி   யார் அதிக முட்டு கட்டுறாங்கன்னு போட்டி வச்சுக்குவோம்.

இரண்டாம் நாள், நெல் அவிக்கிறதுக்கு தேவையான டிரம்மை சுத்தம் செய்து அதில் சாம்பல் பூசி தயார் செய்வோம்.டிரம் கருக்கக் கூடாதுன்னு தான் இந்த சாம்பல். அந்த காலத்துல எல்லார் வீட்டிலேயும் டிரம் இருக்காது. தெரிஞ்சவங்க வீட்டிலே தான் டிரம் எடுத்துக்குவாங்க. சிலர் அந்த டிரம்மை கூட அடுத்தவங்களுக்கு கொடுக்க மாட்டாங்க, கொடுத்தா ஏதாச்சும் டிரம்முக்கு சேதாரம் ஆயிடும்மொன்னு தான்.பெரும்பாலும் இரவு நேரம்தான் நெல் அவிக்க ஆரம்பிப்பாங்க. நெல் அவிக்கும்போது அந்த இருட்டுல கொஞ்சம் குளிர்ல அந்த நெருப்பு கொஞ்சம் இதமா தான் இருக்கும்.அவிச்ச நெல்லை எல்லாம் வாசல்ல கொட்டி ஒரு தார்பாயை போட்டு மூடி வச்சுட்டு தூங்கிடுவோம்.


 மூணாம் நாள் மற்றும் நாலாம் நாள் அவிச்ச அந்த நெல்லை பதமா காய வைப்பாங்க. ஒரேயடியாகவும் காய வச்சிட மாட்டாங்க.2 மணி நேரம் காய வைப்பாங்க அப்புறம் கொஞ்ச நேரம் முட்டு கட்டி வச்சிடுவாங்க.நல்லா பதமா காஞ்சதுக்கப்புறம் ஒரு நாலைஞ்சு வீடா சேர்ந்து நெல் அரைக்க முடிவு பண்ணுவாங்க.ஏன்னா அப்போ எல்லோர்கிட்டயும் மாட்டு வண்டி இருக்காது.


ஐந்தாம் நாள் ஒரு மாட்டு வண்டிய பூட்டிகிட்டு 2-3 குடும்பம் ஒண்ணா போவோம்.போறதுக்கு முன்னாடி புலி சோறு கட்டிக்கிட்டு கிளம்புவாங்க.
ஏன்னா RICEMILL   எல்லா ஊர்லயும் இல்லாததால் கூட்டம் அதிகமா இருக்கும். அதனால காத்திருந்து தான் அரைக்க வேண்டும். சில நாட்களில் மின்சாரம் இல்லாமல் போயி விடும். எனவே கரண்ட் வரும் வரை காத்திருந்து தான் அரைக்க வேண்டும். சில நேரத்துல மொத நாள் போனா மறுநாள் தான் வர்ற மாதிரி இருக்கும்.

இவ்வளவு கஷ்டம் இருப்பதால் யாருக்கும் அந்த அரிசிய ஒரு பருக்கை கூட WASTE பண்ண மனசு வராது.

இப்பல்லாம் அப்படியா



Monday, June 15, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா

1)  Swiss பேங்க்ல பர்சனல் லோன் கிடைக்குமா ?
2)  உலகத்துலேயே பாவப்பட்ட ஜென்மம்னா அது சிக்கன் தான்...
3)  Ervamatin  தயாரிக்க தேவையான மூலிகை அமேசான்லதான் கிடைக்குமா?
ஏன் Flipkart & Snapdeal  ல எல்லாம் கிடைக்காதா?
4)  என்னய்யா உங்க டீ மாஸ்டர் கோட் சூட் போட்டு டீ அடிக்கிறாரு?
      அவரு சென்னை அமிர்தாவுல படிச்சவரு
5)  ஏம்பா இந்த விளம்பரத்துல நடிக்கிறவங்களுக்கு எல்லாம் Retirement கிடையாதா ?...பிரபு 58 வயச தாண்டிட்டாரே....
6)  சன்  டிவி சீரியல்ல கெட்டவங்க போடுற ப்ளான் எல்லாம் கரெக்டா வொர்க் அவுட் ஆகுது. ஆனா நல்லவங்க போடுற எந்த பிளானும் வொர்க் ஆகா மாட்டேங்குது.
7)  வம்சம் சீரியல்ல மதனுக்கு கடைசியா சங்கரிய தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க போல...பாவம் யா மதன் மச்சான் ....





Saturday, June 13, 2015

ஹலோ சார் உங்களுக்கு Swiss பேங்க்ல Account இருக்கா?

Customer Care: Hello Sir நான் Swiss பேங்க்ல இருந்து பேசுறேன் ஒரு 5 minutes உங்க கூட பேசலாமா ?

சொக்கலிங்கம் : சாரி மேடம் wrong number.

Customer Care: இல்ல சார் நான் உங்க கூட தான் பேசணும். நீங்க தானே சொக்கலிங்கம்.

சொக்கலிங்கம் :ஆமா . நான்தான் சொக்கலிங்கம் ஆனா நீங்க நினைக்கிற சொக்கலிங்கம் நான் இல்ல.

 Customer Care: Sir ...Sir ...வச்சுடாதிங்க. நீங்க சொக்கலிங்கம், ஊர் தஞ்சாவூர் பக்கத்துல உள்ள ஒரத்தநாடு சரியா?

 சொக்கலிங்கம் : ஆமா நான் தான் . ஆனா நீங்க எங்கிருந்து பேசுறேன்னு சொல்றிங்க.

 Customer Care: சார் என் பேரு அஞ்சலை நான் Swiss பேங்க்ல இருந்து பேசுறேன்.

 சொக்கலிங்கம் : Swiss பேங்க் na, எங்க அரசியல்வாதிகள் எல்லாம் அவங்க கருப்பு பணத்தைப் பதுக்கி வச்சிருப்பாங்களே அந்த பேங்கா?

 Customer Care:  ஆமா சார்.

சொக்கலிங்கம் :  அது வெளிநாட்டு பேங்குல்ல , நீ நல்லா  தமிழ் பேசுற.

Customer Care: ஆமா சார் நான் வெளிநாட்டு பொண்ணுதான். ஆனா எனக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்னு எல்லா இந்திய மொழிகளும் நல்லா தெரியும். எங்களுக்கு இந்தியலேருந்துதான் கஸ்டமர்ஸ் அதிகம். அவங்க கூட பேசி பேசி எனக்கு இந்த மொழிகள் எல்லாம் அத்துபடி ஆச்சு.


சொக்கலிங்கம் : ஆமா உன் பேரு என்ன சொன்ன ?

Customer Care:என்னோட உண்மையான பேரு ஏஞ்சலினா ஜூலி. ஆனா நான் அதிகமா தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களோட பேசுறதால அஞ்சலன்னு மாத்திக்கிட்டேன்.

சொக்கலிங்கம் : சரி எனக்கு எதுக்கு கால் பண்ணிங்க?

Customer Care:சார் இப்போ எங்க பேங்க்ல ஒரு offer போகுது . அதாவது இன்னும் 10 நாளுக்குள்ள Account open  பண்ணா, நாங்க 10% வட்டி விகிதம் தர்றோம். அது மட்டுமில்ல minimum balance 20 கோடியில் இருந்து 2கோடியா குறைச்சிருக்கோம். இந்த நல்ல chance மிஸ் பண்ணிடாதிங்க அப்புறம் பீல் பண்ணுவீங்க.

சொக்கலிங்கம் :  என்னம்மா எங்க இமான் அண்ணாச்சி மாதிரி பேசுற .

Customer Care: நான் தமிழ் கத்துகிறதுக்கு சன்  டிவியில அவரோட நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்திருக்கேன்.

சொக்கலிங்கம் :  அதுசரி ....நீ கோடிக்கணக்குல பேசுற....ஆனா நான் ஒரு சாதாரண விவசாயிம்மா..என்கிட்டே ஏது அவ்வளவு பணம் பேங்க்ல போடுறதுக்கு.

Customer Care: இல்ல சார் , எங்க பேங்க்ல உங்க ஊர் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், சாமியார்கள், கிரிக்கெட் வீரட்கள் னு எல்லாரும் அக்கௌன்ட் வச்சிருக்காங்க. ஆனா இன்னும் விவசாயிங்க மட்டும் தான் அக்கௌன்ட் ஓபன் பண்ணல. அதான் இனி எங்க அடுத்த TARGET உங்க ஊர் விவசாயிங்க தான்.


சொக்கலிங்கம் :  நீ சொல்ற அந்த எல்லோரும் வருமான வரி கட்ட பயந்து தான் கருப்பு பணத்தை எல்லாம் உங்க பேங்க்ல போட்டு வச்சிருக்காங்க. ஆனா எங்களுக்கு தான் வருமானமே இல்லையே. நாங்க எங்க கோடிக்கணக்குல போடுறது. நாங்களே எங்க ஊர் பேங்குல வாங்குன கடனுக்கு வட்டி கட்ட முடியாம செத்துகுட்டு இருக்கோம்.

Customer Care:என்ன சார் இப்படி சொல்றிங்க . தஞ்சாவூர் ஒரு நெற்களஞ்சியம், விவசாய சொர்க்க பூமின்னு படிச்சிருக்கேன் .  நீங்க என்னன்னா இப்படி சொல்றிங்க.

சொக்கலிங்கம் :  என்னம்மா சொன்ன இன்னொரு வாட்டி சொல்லு

Customer Care: தஞ்சாவூர் ஒரு நெற்களஞ்சியம், விவசாய சொர்க்க பூமி

சொக்கலிங்கம் :  இந்த வார்த்தை எல்லாம் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு. எங்க முன்னோர்கள் எல்லாம் அப்படிதான் இருந்திருக்காங்க . அப்பல்லாம் யாராச்சும் சாப்பிட கடைல அரிசி வாங்குனா அவங்கள கேவலமா பார்ப்போம். ஆனா இப்போ அரசாங்கம் இலவசம்னு கொடுக்கிற அந்த நாத்தம் புடிச்ச அரிசிய வாங்க போயி வரிசையில நிற்கிறோம் . சரி அத விடும்மா .

Customer Care: என்ன சார் இப்படி பேசுறிங்க . இதெல்லாம் உங்க தலைவர்கள் கண்டுக்க மாட்டாங்களா . நீங்க முறையிட மாட்டிங்களா .


சொக்கலிங்கம் :  எங்க தலைவர்கள் எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க . இப்படி யாராச்சு ஒன்னு கூடி இந்த மாதிரி கேள்வி கேற்றுவாங்கன்னு தெரிஞ்சு தான் ஆளுக்கொரு கட்சி, டிவி ன்னு ஆரம்பிச்சு மக்களுக்குள்ளேயே சண்டைய மூட்டி விட்டு பல பிரிவுகளாக பிரிச்சி வச்சுருக்காங்க. அந்த சண்டையில அவங்க குளிர் காயுறாங்க. எங்க உழைப்பை எல்லாம் உறிஞ்சி உங்க ஊர்ல கொண்டு வந்து கொட்டுறாங்க. இங்க தலைவருக்காக தீக்குளிக்க ஆயிரம் தொண்டர்கள் இருக்காங்க . ஆனா அந்த தொண்டர்கள் குடும்பத்த பார்த்துக்க கூட ஒரு தலைவனும் இல்ல.

Customer Care: நீங்க சொல்றத பார்த்தா இந்தியா ஒரு ஏழை நாடுன்னு தோணுது. ஆனா எங்க பேங்க் ல இருக்கிற வாடிக்கையாளர்கள் அதிகம் இந்தியகாரங்க தான் . அதே போல அதிக பணம் டெபாசிட்  பண்ணி இருக்கிறதும் இந்தியர்கள் தான்.

சொக்கலிங்கம் :  அது எல்லாமே எங்க ரத்தத்தை உறிஞ்சி எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம்தான்.சொல்லபோன உங்க பேங்க் ல Indirecta நானும் ஒரு பங்குதாரர்தான் . அதனால நீங்க என்ன பன்றிங்கன்னா என் பேருல அக்கௌன்ட் ஓபன் பண்றதுக்கு பதிலா ஒரு விவசாயக் கடன் போட்டுத் தந்தா உங்கள சாகுற வரைக்கும் எங்க குடும்பம் கடவுளா கும்பிடுவோம்.

Customer Care:  (எதிர் முனை துண்டிக்கபடுகிறது )

சொக்கலிங்கம் :   போடி போ ...இதெல்லாம் நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்துட்டோம் .




















Friday, June 12, 2015

ஏழை இந்தியாவும் பணக்கார இந்தியனும்.

இந்தியா வல்லரசாக இன்னும் 5 வருடமே இருக்கும் நிலையில் ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சி என்ன என்று யோசித்தால், இனி வரும் 5 வருடங்களுக்கு எத்தனை நாள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு அம்பானி மட்டும் மற்றவர்களின் தலையில் ஏறி அடுத்த ஊரைப் பார்த்தால் அந்த ஊரின் வலிமையும் பெருமையும் அடுத்த ஊருக்கு தெரியாது.அனைவரும் ஏணியின் மீது ஏறி மேட்டிற்கு வந்தால்தான் அடுத்த ஊருக்கு அந்த ஊரைப் பற்றிய பெருமையும் வலிமையும் தெரியும்.அதோடு பயம் கலந்த மரியாதையும் இருக்கும்.

இங்கு எல்லோருக்கும் ஏணி தானாக கிடைப்பதில்லை.அதை அடையவே மக்களால் ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.ஆனால் அவர்களால் இதை செய்ய அல்ல நினைக்க கூட நேரமில்லாமை தான் வருந்ததக்க விசயம்.


இந்த ஒருதலை பட்ச வளர்ச்சியின் ஆரம்பம் எது.உயரத்தை பார்த்தவன் பள்ளத்தின் இடர்களை மறந்ததாலா?தான் மட்டுமே உயரத்தின் சொகுசை அனுபவிக்க துடிக்கும் ஆசையாலா?இல்லை பலருக்கு ஏறவே மனம் இல்லையா?


- ஒரு பொழுதுபோக்கு கூத்தாடிக்கு கிடைக்கும் ஊதியமும், அங்கீகாரமும் ஏன் நம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விவசாயிக்கும், தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை.

- ஐஐடி யில் படித்த ஒரு இளைஞன் வருடத்திற்கு 20 இலட்சம் வாங்கும் போது பத்தாவது மட்டுமே படித்த ஒரு கிரிக்கெட் வீரர் பல கோடிகளை சம்பாதிப்பது எப்படி?

- இதுவரை எந்த ஒரு ஊடகத்திலாவது நம் அன்றாட தேவைகளை உருவாக்கித் தரும் நபர்களை முன்னிலைப்படுத்தி ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றது உண்டா?.அப்படி வெற்றி பெறாமல் போக நாமும் ஒரு காரணம் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள உங்களுக்கு தைரியம் உண்டா?

- ரசிகர்களால் தெய்வங்களாகவும், ரோல்மாடலாகவும், தலைவனாகவும் மதிக்கப்படும் எந்த ஒரு நடிகரும்/கிரிக்கெட் வீரரும்/அரசியல்வாதியும்/தொழில் அதிபர்களும் தங்கள் ரசிகர்களின்/தொண்டர்களின் எதிர்காலத்தை நினைத்ததுண்டா? அப்படி எண்ணி இருந்தால் அவர்கள் சமநிலை பற்றிய எண்ணத்தை மறந்தது ஏன்?.

- படிக்காத ஒரு காமராஜர் தான் தமிழ்நாட்டில் பல பேரின் இருளுக்கு ஒளி கொடுத்தார்.படித்த ஒரு இளைஞானால் ஏன் அவனால் ஒருவருக்காவது ஏணியாக இருக்க முடியாது?

- தலைவனால் ஏற்படுத்த முடியாத சமநிலையை ஏன் தொண்டர்களால் தங்களுக்காக இனி ஏற்படுத்த முடியாது.

இது சாத்தியமா என்று ஒரு கணம் யோசிப்பதை விட முயற்சிக்கலாமா என்று முடிவு பண்ணலாமே. உன் விழியால் பிறருக்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம் தானே!!!

Thursday, June 11, 2015

நரிக்கு கிடைத்தது மனிதனுக்கு கிடைக்கவில்லை

ஒரு ஊர்ல ஒரு வியாபாரி இருந்தார். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். ஒரு முறை இளைப்பாறுவதற்காக ஒரு காட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த இடத்தில் ஒரு ஊனமான நரி நடக்க முடியாமல் படுத்திருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் ஒரு புலி ஒன்று மானை வேட்டையாடி விட்டு மாமிசத்தை தின்று கொண்டே அந்த வழியாக போய்க்கொண்டு இருந்தது. அதை அந்த வியாபாரியும் நரியும் பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். பசி முற்றிலும் தீர்ந்த பின்னர் அந்த புலி மீதி மாமிசத்தை வழியிலேயே போட்டு விட்டு சென்று விட்டது. பின்னர், புலி சென்று விட்டதை உறுதி செய்து கொண்ட நரி மெதுவாக நகர்ந்து போய்  அந்த மீதி மாமிசத்தை சாப்பிட்டது. சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து படுத்து கொண்டது. இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த வியாபாரியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. அதாவது எதுவுமே செய்யாமல் படுத்துக்கொண்டிருக்கும் இந்த நரிக்கு மாமிசம் கிடைத்தது போல் நாமும் சும்மா இருந்தால் கடவுள் நம்மை காப்பாற்றி விடுவார் என்று முடிவு செய்து ஒரு மடத்தில்  போய் சும்மா உட்கார்ந்து இருக்க ஆரம்பித்தார்.
நாட்கள் நகர ஆரம்பித்தன. ஆனால் அவர் நினைத்தபடி எதுவும் கிடைக்கவில்லை. எனவே கடவுளின் மீது கோபம் கொண்ட அவர் கடவுளிடம் "எந்த உழைப்பும் இல்லாத அந்த நரிக்கு மட்டும் தேவையானது கிடைக்கும் பொது எனக்கு ஏன் எதுவும் கிடைப்பதில்லை. நானும் உனது படைப்பு தானே, என்னை மட்டும் ஏன் சோதிக்கிறாய்" என கடவுளிடம் முறையிட்டான்.

உடனே கடவுள் அவன் முன் தோன்றி "மகனே! நீ கண்ட அந்த காட்சியில் பாடம் கற்று கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து அல்ல, புலியிடமிருந்து தான்". அந்த புலி எப்படி உழைத்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை அடுத்தவருக்கு கொடுத்ததோ அதே போல் தான் நீயும் இருக்க வேண்டும்.

பாடம் கற்றுக் கொள்வது முக்கியமல்ல. யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.

 

Wednesday, June 10, 2015

ஆமை அரசாங்கமும் ஊமை மக்களும்

அரசு பள்ளியில் ஒரு மதிய வேளையில்,
ஆசிரியர்:"டேய் முத்து,சிவா,பிரபு உங்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்திருக்கு பணம் வாங்கணும்னா சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று ரெண்டையும் இன்னும் ஒரு வாரத்துல ஆபிஸ் ரூம்ல கொடுத்துருங்க"

முத்துவின் வீட்டில்,
முத்து: "அப்பா, எங்க ஸ்கூல்ல எனக்கு ஸ்காலர்ஷிப் தர்றாங்கப்பா, அதுக்கு சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று ரெண்டும் வேணுமாம்.நாளைக்கு போயி வாங்கிட்டு வந்து கொடுப்பா"
முத்துவின் அப்பா: "இரு இரு இன்னும் ரெண்டு நாள் போகட்டும் நாளை கழிச்சு நடவு வச்சிட்டு நானே ஆள் கிடைக்காம தவிச்சுக்கிட்டு கிடக்கிறேன்"
முத்து:"இல்லப்பா இன்னும் ஒரு வாரத்துல கொடுத்தாகனும் சீக்கிரம் வாங்கி தாங்கப்பா"
முத்துவின் அப்பா: "இந்த வாத்தி பயலுக்கு அறிவே இல்லையா? நடவு வச்சிருக்கிற நேரத்துல அத வாங்கிட்டு வா இத வாங்கிட்டு வா ன்னு உசிர எடுக்கிறான்".

தாசில்தார் அலுவலகத்தில்:
முத்துவின் அப்பா(சாதிச் சான்று விண்ணப்பத்தை நீட்டியவாறு):"எப்போ சார் சர்ட்டிபிகேட் கிடைக்கும்"
அலுவலர்: "இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்து வாங்கிக்குங்க"
முத்துவின் அப்பா: "என்ன சார் சொல்றீங்க.இத கொடுக்க ரெண்டு வாரம் ஆகுமா?. சார் ஸ்கூல்ல இன்னும் ரெண்டு நாள்ல கொடுக்க சொல்லி இருக்காங்க, கொஞ்சம் சீக்கிரம் பாருங்க சார்"

அலுவலர்:" உங்களுக்கு மட்டும் நான் இங்க வேலை பார்க்கல, அங்க எத்தனை மூட்டை ஃபைல் இருக்குன்னு பார்த்தேல்ல. போ போ போயிட்டு 10 நாள் கழிச்சு வா பார்க்கலாம்"

முத்துவின் அப்பா அலுவலக பியூனிடம்:"என்னங்க ஒரு சர்ட்டிபிகேட் வாங்க 2 வாரம் ஆகும்னு சொல்றாங்க"
பியூன்:"என்ன சர்ட்டிபிகேட் வாங்கனும் உங்களுக்கு?"
முத்துவின் அப்பா: "சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று"
பியூன்:"நீங்க சட்டப்படி வாங்க நினைச்சா 2 வாரம் ஆகும்.என் கிட்ட 100 ரூபாய் கொடுங்க 2 நாளில் முடிச்சிடலாம்"

- மேற் சொன்ன ஒட்டு மொத்த உரையாடல்களும் நமக்கு தரும் பதில், லஞ்சத்தின் அடிப்படை ஆரம்பம் எங்கே என்ற கேள்விக்கு?

1) ஒரு கிராம நிர்வாக அதிகாரியால்() இவர் இந்த சாதியை சார்ந்தவர் என்று பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் எதற்கு 15 நாட்கள் தேவைப்படுகிறது-சாதிச் சான்று வழங்க.
2) இவர் இந்த சாதியை சார்ந்தவர் என்று பரிந்துரை செய்ய எதற்கு 50/100 ரூபாய் VAO க்கு தர வேண்டும்.விண்ணப்பித்தவருடைய தேவையின் அவசரமும், எதிர்த்தாலும் துணைக்கு வராத சட்டமும் இருப்பதால் தான் இந்த தவறு எங்கும் நடைபெறுகிறது.மேலும் அந்த VAO தான் இந்த வேலையில் சேருவதற்கு கட்டிய பல லகரங்களை வட்டியுடன் வசூல் செய்ய தூண்டுகிறது.
3)இந்த கணினி உலகத்தில் அனைத்தையும் இலகுவாகவும், விரைவாகவும் பெறத் துடிக்கும் மக்கள் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் திறமை அரசு நிறுவனங்களில் இல்லாமலிருப்பது எப்படி?.
இந்திய தேர்வாணையத்தின் அடிப்படையில் முதல் இடங்களை பிடிக்கும் சிறந்த மாணவர்கள் தான் அரசு அலுவல்களில் பணி புரிகிறார்கள்.அரசு வேலை இல்லாதவர்கள் தான் தனியார் நிறுவனங்களில் சேர்கிறார்கள்.அப்படியிருக்க எந்த ஒரு விஷயம் இரண்டு துறைகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது.
4) இந்த கால கட்டத்தில் காலம் தாழ்த்துதலே லஞ்சத்தின் ஒரு அடிப்படை காரணமாக இருக்கிறது.மக்களும் தங்கள் அவசரம் கருதி எதையும் தட்டி கேட்காமல் பணிந்து செல்கிறார்கள், அப்படி தட்டி கேட்பவர்கள் அடுத்தவர்களால் ஏளனம் செய்யப் படுகிறார்கள்.
5) அரசு நிறுவனங்களில் வேலை புரிய ஆசைப் படும் நாம் ஏன் ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்யவோ/அரசு பள்ளிகளில் படிக்க வைக்கவோ/அரசு நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்கவோ விருப்பம் காட்டுவதில்லை.இந்த ஒரு விஷயத்திலேயே நம் ஒவ்வொருவரின் ஆசையும், செயல் திறனும் புரிந்து விடும்.
6) எந்த ஒரு அரசு பணியாளரும் தன் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது இல்லை.இதிலிருந்தே தெரிந்து விடுகிறது அந்த அதிகாரிக்கு தன் மேல் உள்ள நம்பிக்கை.

ஆமையின் வேகமும் ஊமையின் வார்த்தைகளும் என்றும் அரங்கமேறாது.

Monday, June 8, 2015

எனது கிறுக்கல்கள்: வரதட்சணை கேட்கலாமா? வேண்டாமா?

அம்மா
என் கனவுகளின் முதல் உருவம்
என்னை காதலித்த முதல் உள்ளம்
என் இதழ் உதித்த முதல் கவிதை
என் இருளின்போதெல்லாம் முதல் வெளிச்சம்

கனவு

உறங்கும் என் விழிகளால் மட்டுமே அவளுடன் பேசுகிறேன் உறங்கா என் இதய ஆசைகளை.

அந்நியன்
உழைக்கத் துடிக்கும் கரங்களும் உறங்க மறுக்கும் விழிகளும்
வெல்லத் துடிக்கும் இதயமும் வியக்க வைக்கும் ஆற்றலும்
இருந்தும் இந்தியன் தலை நிமிர முடியவில்லை
அவன் இந்தியாவில் இல்லை.


காதலி
என் தாயை விட உன் மேல்தான் பாசம் அதிகம்
என் தந்தையை விட உன் மேல்தான் மரியாதை அதிகம்
என் நண்பனை விட உன் மேல்தான் நம்பிக்கை அதிகம்
அடுத்த ஜென்மத்திலும் உன்னுடனே சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என் அழகு இந்தியாவே.

வரதட்சணை
உழைக்க மறுக்கின்ற உணர்வுகளை மதிக்கத் தெரியாத
ஒரு மிருகத்துடன் சில இரவுகள் உறங்காமல் இருக்க
ஒரு உத்தமி கொடுக்கும் உண்டியல் சேர்க்கை.

ஒரு தலை ராகம்
அழியாத கோலமாய் என் நெஞ்சில் நீ
அதில் தெரியாத ஒரு புள்ளியாய் உன் நெஞ்சில் நான்.

அதிசயம்
பேசாத புது வார்த்தை பைந்தமிழின் அதிசயம்
பிறை நாளில் முழு நிலவு இரவுக்கு அதிசயம்
மழை நாளின் வாசனை மண்ணுக்கு அதிசயம்
மழலை பேசும் வார்த்தை எல்லாம் தாய்க்கு அதிசயம்
உன் நெஞ்சில் நான் இருந்தால் அது ஒரு அதிசயம்
என் நெஞ்சில் நீதான் என்றும் அதிசயம்

பொன்னு விளையிற பூமி: சின்ன கல்லு பெத்த லாபம்


  காலத்திற்கேற்ப மாற்றம் தேவை. இது தொழில்நுட்ப மாற்றத்திற்கு மட்டும் அல்ல. எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். நம்மைச் சுற்றியே இன்று பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல விவசாயத் துறையிலும் நாம் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கையாண்டு தான் ஆகா வேண்டும்.

பணமும் மன நிறைவும் தரும் கீரை சாகுபடி:



- நீர் அதிகம் தேவைப்படாது.
-  கை இறைவை  கொள்ளலாம்.
- 15-20 நாட்கள் சாகுபடி காலம்.
- தினமும் கீரை பறிக்கும் வகையில் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.
- ஒரே வகையான கீரையாக இல்லாமல் தண்டு கீரை, பசலி கீரை, மணத்தக்காளி, வெந்தய கீரை, கொத்தமல்லி என எல்லாம் கலந்து பயிரிட்டால் சிறப்பு.
- மார்க்கெட்டில் மொத்தமாகவும், சந்தைகளில் சில்லறையாகவும் விற்பனை செய்யலாம்.
- ரெகுலர் கஸ்டமர் பிடித்து வைத்துக் கொள்வது உங்கள் வியாபாரச் சிந்தனையைக் கூட்டும்.
-  பீட்சா, பர்கர் விற்பது வியாபார நோக்கத்தை மட்டுமே கொண்டது. ஆனால் இந்த கீரை சாகுபடி பண வரவை மட்டுமல்ல நம் பாரம்பரிய உணவுகளை பலருக்கும் கொடுத்து ஆரோக்கிய வாழ்வை நிலை நிறுத்துகிறோம் என்ற மன நிறைவையும் தரும்.


Sunday, June 7, 2015

ரிமோட் கைல கிடைச்சா இந்த நிகழ்ச்சியையும் பாருங்களேன்

இந்த ஞாயிறு காலை 10:30 மணிக்கு டிவியில் ஒவ்வொரு சேனலாக தேடி அலையும் போது மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாம் தினந்தோறும் சாலையில் கடந்து போகும் எளிய மக்களை(மீன் விற்கும் பெண், காய்கறி விற்பவர் மற்றும் சாலையோர வியாபாரிகள் ) சந்தித்து அவர்களுடைய தினசரி வாழ்க்கை அனுபவங்கள், வாடிக்கையாளர்களுடன் அவர்களுடைய உரையாடல்,வியாபாரத்தில் லாப நஷ்டங்கள் என உரையாடி விட்டு கடைசியில் அவர்களுடைய சின்ன ஆசையை நிறைவேற்றி விட்டு முடிப்பார்கள்.

இந்த வார நிகழ்ச்சியில் சாலையோரத்தில் மீன் விற்கும் ஒரு அம்மாவுடன் அவர்களின் தினசரி வாழ்க்கை அனுபவங்களை நேர்கண்டார் ஒருவர் .

பார்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த அம்மாவின் பகட்டு இல்லாத அந்த வெள்ளந்தியான நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது.
சில வருடங்களுக்கு மீனின் விலை மற்றும் இப்போது மீனின் விலை, மீன் வாங்க வருபவர்களுடன்  நடக்கும் அனுபவம், மீன் விற்காவிட்டால் அவர் மன நிலை எப்படி இருக்கும் என அத்தைனையும் பகிர்ந்து கொண்டார்.

உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டதற்கு, இன்னைக்கு இந்த மீனெல்லாம் வித்திட்டாலே போதும்னு சொன்னங்க. அத கேட்கும் போதே மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவங்களோட ஆசை கூட அவங்க தொழிலோட ஒட்டியே இருந்தது.விடாபிடியாக இவரும் அவருடைய ஆசையை கேட்க, வெயில் காலத்தில் மீன் விற்கும் போது  வெயில்  படாமல் இருக்க ஒரு குடை இருந்தால் நல்ல இருக்கும்னு சொன்னங்க. பெட்டி எடுத்தவரும் அவர் ஆசையை நிறைவேற்றினார்.

ஞாயிற்று கிழமைகளில் மற்ற சேனல்களை திருப்பினால் எங்கு பார்த்தாலும் இருக்கும் சினிமாத்தனமான நிகழ்ச்சிகளை பார்த்து சலித்து போன எனக்கு இந்த நிகழ்ச்சி சற்று மாறுதலாக இருந்தது.உங்களுக்கும் ஞாயிற்று கிழமைகளில் உங்க கைல ரிமோட் கிடைச்சா நீங்களும் try பண்ணி பாருங்க.

ஓ நிகழ்ச்சி பேரு சொல்ல மறந்துட்டேனே ...சின்ன சின்ன ஆசை

Saturday, June 6, 2015

வெளிச்சம்: நம்ம ஊரு நாயகன்

நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான கபாடி விளையாட்டிற்கு பெயர் போன வடுவூர் கிராமத்தில் பிறந்து இன்று சர்வதேச அளவிலான பல கபாடி போட்டிகளில் கலந்து கொண்டு நம் நாட்டிற்கு பல பதக்கங்களை வென்று தந்திருக்கும் நம்ம ஊரு நாயகன் ராஜகுரு சுப்ரமணியன் அவர்களை பாராட்டுவதில் பெருமிதம் கொள்வோம் .





- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
- சிறு வயதில் இருந்தே கபாடி மீது இருந்த ஆர்வத்தால் இடைவிடாத முயற்சிக்கு பின் இன்று இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
-கடந்த வருடம் (2014) உலக கோப்பை மற்றும் ஆசியன் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய தங்க பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்.
- கடந்த வருடம் (2014) ஆரம்பித்த "PRO Kabbadi League" போட்டிகளில் "TELUGU TITANS " அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தியவர்.
- IPL  போன்ற அந்த தொடரில் இரண்டாம் அதிக பட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்.
- கபாடி விளையாட்டை 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சேர வழி வகுக்குமாறு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
- முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற வாசகத்தின் அடையாளமாகவும் சாத்க்கத் துடிக்கும் பல இளைஞர்களின் கனவு நாயகனாகவும் விளங்கும் இந்த சாதனை தமிழன் இன்னும் பல வெற்றிகள் பெற நாம் வாழ்த்துவோம்.


விவசாயம்...what you mean by விவசாயம்


ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாக ஆசைப்படுகிறான்.
நடிகரின்/நடிகையின் வாரிசு நடிகனாக/நடிகையாக/டைரக்டராக ஆசைப்படுகிறார்கள்.
டாக்டரின் வாரிசு டாக்டராக ஆசைப்படுகிறான்.
கிரிக்கெட் வீரரின் மகன் பேட்ஸ்மேனாக ஆசைப்படுகிறான்.

மேலே சொன்ன எந்த ஒரு ஆசையும் அவர்களது பெற்றோர்களால் நிராகரிக்கப்படுவதில்லை.

ஆனால் எந்த ஒரு விவசாயின் மகனும் விவசாயியாக விரும்புவதில்லை.அப்படி விரும்பினாலும் அவர்களது பெற்றோரால் ஆதரிக்கப்படுவதில்லை."நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம் நீயாவது இந்த நிலத்துல கஷ்டப்பட வேண்டாம்" என்று விவசாயத்தின் மேல் வெறுப்பான ஆதங்கம் வைக்கப்படுகிறது.

ஒரு மனிதன் வாழத் தேவையான உணவு உற்பத்தி துறை விவசாயத்தின் மேல் விருப்பம் இல்லாமல் ஆடம்பர துறைகளை தேர்வு செய்ய தூண்டுதலாக இருக்கும் காரணிகள் என்ன என்ன.....

- ஒரு பொருளை தயாரித்தவன் அதன் விளையை நிர்ணயிக்க முடியாத நிலை விவசாயத்தில் மட்டும் தான் உண்டு.

- கிரிக்கெட்- "மேன் ஆப் தி மேட்ச்"/சினிமா - "தேசிய விருது/மாநில விருது/டாக்டர் பட்டம்",அரசியல் - "பல தரப்பட்ட பட்டங்கள்" என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சிறப்பிக்கும் அரசாங்கம் எந்த ஒரு விவசாயியையும் இதுவரைக்கும் கவுரவித்ததில்லை.

- எந்த ஒரு துறையிலும் 58 வயசுக்கு பிறகு ஓய்வும், ஓய்வுக்குப் பின் ஓய்வூதியமும் வழங்கப்படும்(இன்னும் ஒருபடி மேல் VRS என்று வேலையே செய்யாமல் ஊதியம் பெறுவது).ஆனால் விவசாயி மட்டும் தான் ஓய்வில்லாமல் உயிர் போகும் வரை உழைக்கும் ஒரு ஜீவன்.விவசாயம் பொய்த்தாலும் உயிரை விடுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாதவன்.

- அந்நிய நாட்டுக்காரனின் தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி பால் வார்க்கும் அரசாங்கம், நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்திற்கு 3 மணி நேரம் மின்சாரம் வழங்கி விவசாயியின் வயிற்றில் அடிக்கிறது.

- சரியான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் எல்லா விவசாயிகளும் இடைத் தரகர்களால் ஏமாற்றப்படுவது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பம் அவசியம் தான்.ஆனால் வாழ உணவு ரொம்ப முக்கியம்.ஒரு கட்டத்துல சாப்பிட சோறு இல்லாமல் எல்லாம் செல்போன்/லேப்டாப் இதை எல்லாம் தான் திங்கனும்.இப்பவும் கிராமத்துல கொஞ்ச பேர் கவுரத்துக்காக தான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.அரசாங்கம்/மக்களின் கூட்டு முயற்சியால் தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.அரசாங்கமும்/நாமும் இன்னும் காலம் தாழ்த்தினால் நமது வாரிசுகள் விவசாயத்தை மட்டும் அல்ல...சாப்பாட்டையும் மறந்திட வேண்டியது தான்.