Monday, December 14, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 12/14/2015

  - உன் தலைவன் யார்  என்று சொல்,  நீ என்று சொல்கிறேன். தகுதிக்கு மீறியவனை தலைவனாக தேர்ந்தெடுத்தால்  தலைவலி தான்.

   - வரும் தேர்தலில் தி.மு.க மற்றும் அ .தி.மு.க இரண்டு கட்சிகளையும் தோற்கடிப்போம் - சமூக வலைதள நண்பர்கள்.
      அரசியல் கட்சிகள்- தம்பிகளா  நீங்க எல்லாம் எங்க Vote லிஸ்ட்லேயே கிடையாதே.

  -  விலையில்லா பொருட்கள் மோகம் இன்று படிக்காத பாமரனில் ஆரம்பித்து படித்த கணினிப் பொறியாளன் வரை பிடித்துள்ளது.

  - நல்லவன வெளியில் தேட வேண்டாம். நம்ம கிட்ட இருக்கிற கெட்டவன திருத்தினாலே போதும்.

  - நம்ம எல்லாருக்குமே ஒரு நாள் போபியா வியாதி. எந்த ஒரு விசயமுமே ஒரு நாள் தான் .

 

Monday, July 6, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 07/07/2015

1) பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் உலகத்துலேயே பெரிய துரோகம்.

2) "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்" - ஈ.வீ. கே.எஸ் .இளங்கோவன் - தலைவரே சொல்றதுதான் சொல்றீங்க முதல் அமைச்சர்னு தான் சொல்லுங்களே..

3) பீட்சா பர்கர் கடை இருக்கிறது யாருக்கு  நல்லதோ இல்லையோ ஜிம் வச்சிருக்கவங்களுக்கு நல்லது - ஏன்னா எல்லாருடைய புது வருட கனவுகளில் ஒன்று உடல் எடை குறைப்பது.

4)  "டாஸ்மாக் வருமானத்தில் சரிவு. நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு" - அடப் பாவிகளா அவனே  திருந்துனாலும் நீங்க விடமாட்டிங்க போலேயே.

5) உலகத்துலேயே அதிக நோய் எதிப்பு சக்தியுடன் வாழ்வது நம்ம ஊர் மக்கள் தான் - பின்ன வெள்ளைக்காரன கொண்டாந்து ஒரு வாரம் நம்ம ஊர் ட்ராபிக்ல, மார்க்கெட்ல விட்டுப் பாருங்க நாலு நாள் தங்க மாட்டான்.

6) நம்ம ஊர்ல தான் சினிமாகாரங்களுக்கு ஓய்வே கிடையாது. நடிகைன்னா சீரியல் இருக்கு, நடிகன்னா அரசியல் இருக்கு.

7) கூத்தாடிய தூக்கி வச்சு கொண்டாடுறதும், விவசாயிய தற்கொலை பண்ணிக்க வைக்கிறதும் அரசு மட்டுமல்ல, நாமளும் தான் - 1000 ரூபா கொடுத்து படம் பார்ப்போம் 1 ரூபா பால் விலை ஏறுனா பால் வியாபாரிய திட்டுவோம். ஆனா தியேட்டர்ல ஒரு காபிய 80 ரூபா கொடுத்து வாங்குறத கௌரவமா நினைப்போம். பால் கறக்கிறவன் கேவலமானவன் ஆனா டிகாஷன் கலந்து கொடுக்கிறவன் நகாரிகமானவன்.



Sunday, July 5, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 06/07/2015


1) உன் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்றேன்னு சொல்லி உன்கிட்ட இருந்து 10 ரூபாய் வாங்கி ஒரு தேவைகளையும் நிறைவேற்றாமல் உனக்கு ஒரு 10 காசுக்கு ஒரு குச்சி மிட்டாய் இலவசமாக வாங்கி தருவது தான் இன்றைய ஜனநாயகம்.

2) நான் நடுநிலையானவன்னு சொல்றவங்க எல்லாம் மறைமுகமாக மெஜாரிட்டி கட்சிய தான் ஆதரிக்கிறாங்க.

3) படிக்கிறதுக்கு ஊர்ல இருந்த நிலைத்த வித்து, படிச்சு முடிச்சு வேலை பார்த்த காசை வச்சு ஊருக்கு போயி நிலம் வாங்கி விவசாயம் பண்ணலாமானு யோசிக்கிறது தான் இன்றைய நடுத்தர வயதினரின் மன ஓட்டம்.

4) தொழில்நுட்பத்தில் எவ்வளவோ மாற்றம் வந்திருந்தாலும் பெரும்பாலானோர் வீட்டில் இன்னும் அரிசி சோறுதான்.

5)  "மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு " - விஜயகாந்த்.
    எவ்வளவு நேரம் தான் லேபிளையே படிப்பீங்க சீக்கிரம் ஓபன் பண்ணுங்க கேப்டன்.

6) நீ எரும மாடு மேய்க்க தான் லாயக்குனு திட்றவங்களுக்கும் டீ போட பால் கறந்து கொடுக்கிறான் பாரு அவன் தான் கடவுள்.

Saturday, June 27, 2015

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!!


அண்ணாவின் மனித நேயம்:

    அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும், அவரது இல்லத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்தனர்.உடனே அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

   "ஒருநாள் முழுவதும் காவலர்கள் எனது இல்லத்துக்கு முன்பாக நிற்பதை நான் விரும்பவில்லை. வேண்டுமானால் சாதாரண உடையில் ஒரு நாற்காலியில் அமரச் சொல்லுங்கள் போதும்" என்றார்.

    தான் முதல்வர் என்றாலும் தமது இல்லத்துக்கு நியமிக்கப்பட்ட சாதாரணக் காவலர்களைக் கூட கஷ்டப்படுத்த விரும்பாமல் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தினார் அண்ணா.
       - தினத்தந்தி சிறுவர் மலரில், அன்புச்செல்வன் வீரபாண்டி

எனது முன்னோடி :

   1908-1910-ம் ஆண்டுகளில் தூத்துக்குடியில் தேச விடுதலையை வலியுறுத்தி நடந்த பிரச்சாரங்களுக்கும் போராட்டங்களுக்கும் வ.உ.சி. தலைமையேற்று நடத்திய சமயம். ஒரு வட  இந்தியத் தலைவர் தூத்துக்குடிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "எனக்கு தாய்  நாட்டுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றக் காரணம் வ.உ.சிதம்பரம் தான். அவரது வாழ்க்கைப் பற்றிய பல செய்திகளை நான் பத்திரிகைகளில் படித்த பின்னர் தான் தேசியப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தேன்" என்று மனம் திறந்து பாராட்டினார். கூட்டம் முடிந்த பிறகு அத்தலைவர் வ.உ.சி வீட்டுக்கும் சென்று அவருக்கு கதராடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

  அந்த வட இந்தியத் தலைவர் யார் தெரியுமா?

  1950-ல் முதல் இந்திய ஜனாதிபதியான பாபு ராஜேந்திர வபிரசாத்துதான்.

- தினத்தந்தி சிறுவர் மலரில், அ. யாழினி பர்வதம், சென்னை - 78.

Friday, June 26, 2015

தமிழ் சினிமா இயக்குனர்கள் பற்றி ஒரு வரியில்,


1) எவன் ஒருத்தனுக்கு படுக்கையில  படுத்த உடனே தூக்கம் வருதோ அவன் தான் உலகத்துல நிம்மதியான மனுஷன்.

2) சிக்கன் சமைக்கிறப்ப  இருக்கிற அந்த ஆர்வம் பாத்திரம் கழுவுறப்ப இருக்கிறதில்ல.

3) நாம் அடிமையாகி விடக்கூடாத ஒரு விஷயம், மின்சாரம்.  எதுக்கும் வீட்ல அம்மி,ஆட்டுகல், விசிறி மற்றும் மெழுகுவர்த்தி எல்லாம் தயாரா வச்சுக்குவோம்.

4)  ஊர்ல உள்ளவங்க பேச்சோட பேச்சா வர்ற சில வார்த்தைகள் ,
        - மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லை
        - அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கான
         - உனக்கு வாக்கப்பட்டு வந்த நாள் முதலா நான் என்னத்தைக்  கண்டேன்
         - நாயக் குளிப்ப்பாட்டி நாடு வீட்ல வச்சா இப்படி தான்

5) தமிழ் சினிமா இயக்குனர்கள் பற்றி ஒரு வரியில்,
      ஒரே கதையை வேற வேற மாதிரி எடுத்தா அது - ஷங்கர்
      ஒருத்தருக்கும் புரியாம எடுத்தா அது - கமல்
      ஒருத்தனே வச்சே படம் எடுத்தா அது - வெற்றிமாறன்
      ஒரே ஆளு படத்த எடுத்தா அது - விஜய டி . ராஜேந்தர்
      சரக்கடிக்கிறதுக்கு நடுவுல படம் எடுத்தா அது - வெங்கட் பிரபு
      குடும்ப கதையை படம் எடுத்தா - வீ  சேகர்
      குடும்பமே படம் எடுத்தா அது - ராஜா
      ஆபாசம் இல்லாமல் படம் எடுத்தா அது - விக்ரமன்
      ஆபாசத்துக்கு நடுவுல கொஞ்சம் படம் எடுத்தா அது - எஸ் ஜே சூர்யா
      இருட்டுல படம் எடுத்த அது - மணிரத்னம்
      இருட்டுல இருக்கிற விஷயத்தை வெளியில காட்டுனா அது - பாலா
      அழகான தமிழ்ல டைட்டில் வச்சிட்டு அசிங்கம் அசிங்கமா ஆங்கிலத்தில்
      பேசுன அது - கெளதம் மேனன்
      படத்தில ஹீரோவ கத்தி கத்தி பேச வச்சா அது - ஹரி       
      ஊர் பேரையெல்லாம் டைட்டிலா வச்சா அது - பேரரசு
      

      
       
     

       
      
      

Thursday, June 25, 2015

கத்தியில் பேசப்பட்ட கம்யூனிசம்

கத்தி திரைப்படத்தில் ஒரு காட்சி...
கம்யூனிசம்னா என்னன்னா...
உன் பசி முடிஞ்சதுக்கப்புறம்  நீ திங்குற ஒவ்வொரு  இட்லியும் உன்னுது இல்ல.
படம் பார்த்தவுடன் தோன்றிய விஷயம்
 - படம் நல்லா இருக்கு அப்படின்னு யாரவது ரெண்டாவது தடவ போயி டிக்கெட் வாங்க போனா இது உன் டிக்கெட் இல்லன்னு அனுப்புனா அந்த படம் சம்பந்தபட்டவர்கள் ஒத்துக்கொள்வார்களா ?
- இல்லாட்டி படம் 100 கோடி கலெக்சன்ஆயிடுச்சு இனி வர்ற கலெக்சன் எல்லாம் நம்மளுது இல்லைன்னு சொல்லி தியேட்டர்ல படத்தை தூக்கிடுவாங்களா ?

சரி நம்ம மேட்டர் அது இல்ல

எப்புடி பசி முடிஞ்சதுக்கப்புறம் நீ  திங்குற ஒவ்வொரு இட்லியும் உன்னுது இல்லையோ அதே மாதிரி தான், பசி முடிஞ்சதுக்கப்புறம் நீ வேஸ்ட் பண்ற ஒவ்வொரு தோசையும் உன்னுது இல்ல. மறைமுகமாய் யாருக்கோ போயி சேர வேண்டிய தோசைய நீ வேஸ்ட் பண்ற, அந்த தோசை சேர வேண்டிய ஆள  நீ பட்டினி போடுற. நீங்க சொல்லலாம் என் காசு என்னால சாப்பிட முடியல அதனால கொட்டுறேன்னு. எந்த ஒரு விவசாயியும் இதை நான் இவருக்காக தயார் செய்கிறேன்னு தயாரிக்கிறது இல்லை. விவசாயியோட வேல எல்லாருக்கும் உணவு கிடைக்கணும். இதுல ஏழை பணக்காரன்னு அவன் பார்க்குறதே இல்ல.  உனக்கு எது தேவையோ அத மட்டும் நீ வாங்கிக்கோ. தேவைக்கு அதிகமாய் வாங்கி வீண் செய்யாதே. யாராச்சும் ரெண்டு கார் வாங்கிட்டு ஒன்னு எனக்கு போதும் இன்னொன்னு வேணாம்னு மலையிலிருந்து தள்ளி விட்ற முடியுமா?..யாருகிட்டயாவது செகண்ட் சேல்ஸ் பண்றம்ல. அதே போலத்தான் சாப்பாட்டு விஷயத்துலயும் இருக்கணும்.சில பேர் டேஸ்ட் புடிக்கல அதனால கொட்டுறேன்னு சொல்லலாம். உனக்கு புடிக்காத காஸ்ட்லி மொபைல ஆத்துலய தூக்கி போடுற. OLX ல வித்துடுறல்ல....எனவே உணவையும் மதிக்கக் கத்துக்கங்க...ஏன்னா ஒவ்வொரு விவசாயியும் உணவைத் தயாரிப்பதை ஒரு தொழில் என்பதையும் தாண்டி அத ஒரு சேவையை தான் பார்க்குறான். அவனோட உழைப்புக்கு மரியாதை கொடுங்க. நீங்கள் தயாரிக்கும் ஒரு பொருள் தெருவில் நீங்கள் போகும்போது வீணாக்கப்பட்டு கிடந்தால் எப்படி வலிக்குமே அந்த வலியை அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள்.

இனி வரும் சந்ததியினருக்கும் சாப்பாட்டை வீணாக்க கூடாது என்ற கருத்தை விதையுங்கள்.





 

நல்லதே நினை... நல்லதே பேசு.. நல்லதே நடக்கும்..26/6/2015

1)  நம்ம கைல இருக்கிற  குடை மாதிரி தான் நம்ம மனசையும் வச்சுக்கணும். மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் குடை தன் நிலை மாறுவதில்லை.

2) நாளைக்கு பண்ணவா? அப்படினு கேட்குற கேள்வியிலேயே தெரிஞ்சுக்கலாம் அவங்களுக்கு அந்த வேலையில இருக்கிற ஆர்வம்.

3) களவும் கற்று மற -
     களவு - திருட்டு , கல் - பொய்
     களவும் கற்றும்(கல்லும் என்பதன் மறுஊ சொல் ) மற.

4) எல்லாருக்கும் நல்லவனா இருக்க முயற்சி செய்யாதிங்க...ஏன்னா நம்மள சுத்தி  இருக்கிற எல்லாரும் நல்லவங்க கிடையாது.

5) மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது. புகைப் பிடித்தல் புற்று
    நோயை உண்டாக்கும்  .
    வடிவேல் வசனம்...அப்புறம் தம்பி நான் சிரிப்பா சொன்னதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க...ஹைய்யோ ...ஹைய்யோ...

6) சந்தர்ப்பங்களை தேடி அலைய வேண்டாம். கிடைச்ச சந்தர்ப்பத்தை நழுவ விடாம ஜெயிக்கிறது தான் புத்திசாலித்தனம்.

7) எல்லா ஊர்லயும் 100 நாள் வேலை ஒழுங்கா நடந்திருந்தா எல்லா கிராமமும் நீங்க நினைக்கிற கனவு கிராமமா மாறியிருக்கும்.