Thursday, October 27, 2011

வெளிச்சம் - மகளிர் சுய உதவிக் குழு





இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சொல்லுமளவுக்கு தமிழ்நாட்டில் வெற்றியடைந்த ஒரு திட்டம் தான் "மகளிர் சுய உதவிக் குழு".

12-20 பெண்கள் ஒரு குழுவாக சேர்ந்து மாதம் 100 ரூபாய் செலுத்தி கூட்டுத் தொகையை ஒரு வங்கி கணக்கில் டெபாசிட் செய்வர்.பின்னர் குழுவில் உள்ள எவருக்கேனும் பண உதவி தேவைப்பட்டால் வங்கியிலிருந்து எடுத்து பகிர்ந்து கொள்வது.பின்னர் மாதா மாதம்பெற்ற கடனின் ஒரு பகுதியுடன் நிலுவையில் இருக்கும் கடன் தொகையின் வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும்.எடுத்த தொகையை குறைந்தது 5 மாதத்திற்குள் செலுத்தி விட வேண்டும்.

படிக்காத கிராமத்து பெண்களை தங்கள் சொந்தக் காலில் நிற்க வைத்த ஒரு அருமையான திட்டம்.அது மட்டுமின்றி பல ஆண்களே "ஆடவர் சுய உதவி குழு" என்று தோற்றுவிக்குமளவிற்கு வெற்றியடைந்த திட்டம்.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1) சேமிப்பு
2) அவசர பண உதவி
3) ஒற்றுமை
4) பிறரின் கஷ்டத்தில் பங்கு கொள்ள தூண்டுதல்
5) வட்டிப் பணம் நமக்கே ஒரு சேமிப்பாய் வளருதல்
6) கடன் வாங்கியோர் முழுமையாக செலுத்திய பின்னரே அடுத்த் கடன் பெற தகுதியானவர் என்பதால் ஒருவருக்கே பணம் சேருவதை தடுத்தல்.
7) அரசு வழங்கும் குறைந்த வட்டி விகித கடன்.
8) பெற்ற கடனை குறித்த காலத்தில் செலுத்த தூண்டுதல்.

இப்படி பல நல்ல அம்சங்கள் இருந்தும் சில விஷமிகள் இந்த திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தியும் வருகின்றனர்.
1) குழுவில் யாருக்கும் பண உதவி தேவைப்படாத பொழுது, குழுவில் இல்லாத வெளி நபருக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து வசூலித்து விட்டு குழுவின் வட்டி விகித அளவில் கணக்கு காட்டும் குழு தலைவிகள்.
2) இன்னும் சில பேர் குழு சேர்த்து விட்டு 2 மாதத்தில் தலைமறைவு ஆகி விடுவது(சில நேரங்களில் வெளியூர் படித்த பெண்கள் குழு தலைவியாக பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு).எனவே அறிமுகம் இல்லாத நபரை குழு தலைவியாக நியமிப்பதில் எச்சரிக்கை தேவை.

நல்ல திட்டங்களை அறிமுகப் படுத்தவும் அதை கொஞ்சம் தூரத்தில் இருந்து கவனிக்கவும் மட்டும் தான் அரசால் முடியும்.அதை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நாம் தான் செயல்படுத்த வேண்டும்.

1 comment:

  1. Now a days this theft happening in all streets. select a known person who stays in the same area atleast for 5 years.

    ReplyDelete