Monday, October 3, 2011

வாகை சூட வா - சினிமா விமர்சனம்


வாகை சூட வா - சினிமா விமர்சனம்

கதை: 1960 களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கல்வி அறிவு இல்லா மக்களிடையே கல்வியின் அவசியத்தை உணர்த்தும் நாயகனை பற்றிய கதை.இதில் நாயகனை விரும்பும் நாயகி, முதலாளிகளை தெய்வமாக மதிக்கும் வெள்ளந்தி மக்கள், படிப்பு வாசனையே பிடிக்காமல் வாத்தியாருக்கு டிமிக்கி கொடுத்து செங்கல் சூளையில் வேலை செய்யும் சிறுவர்கள் மற்றும் பல கிராமத்து மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து வாகை சூடி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

கதாபாத்திரங்கள்:
விமல்:
இந்த கதாபாத்திரத்திற்கு விமல் முழுவதுமாக பொருந்தா விட்டாலும் இயக்குனரின் நடிகராக எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லாத நாயகனாக கொடுத்த வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்.களவாணி அளவுக்கு மனதை களவாட வில்லை.

இனியா:
தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல அறிமுகம்.நாயகனை ஏமாற்றி வியாபாரம் செய்யும் போதும்,ஊருக்கு போகிறார் என்றவுடன் காட்டும் ஏக்கமாகட்டும்,தனக்கு கல்யாணம் நின்று விட்டது என்று சொன்னவுடன் நாயாகன் மகிழ்கிறான் என்று தெரிந்து காட்டும் முக பாவனையாகட்டும் அப்பப்பா....இனியா.. இனி நீயா!!

பாக்யராஜ்:
சில சீன்களே வந்தாலும் கதையின் உயிரோட்டத்திற்கு துணை நிற்கிறார்.

தம்பி ராமைய்யா:
248 என்ற கேரக்டரில் கிராமத்தில் வாழும் சில பந்தா கேரக்டர்களை கண் முன்னே நிறுத்துகிறார்.

பொன்வண்ணன்:
தன்னை கடவுளாக நம்பும் மக்கள் தனக்கு எதிராக செயல்படும்போது அவர்களை ஊரை விட்டே துரத்த முடிவு செய்யும் போதும் மற்றும் இதற்கு காரணமாக இருந்த நாயகனை தீர்த்து கட்ட முடிவு செய்யும் இடத்திலும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

குருவிக்காரர்,வைத்தியர்,செங்கல் சூலையில் வேலை பார்க்கும் சிவகாமி கேரக்டர்,போஸ்ட் உமன் ம்ற்றும் ஊர் சிறுவர்கள் என்று அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு கிராமத்து வாழ்க்கை நம் கண் முண்ணே நிறுத்துகின்றனர்.

பிளஸ்:
-நல்ல ஒரு சமூக கருத்தை திரையில் சொல்லியதற்கு
-எந்த ஒரு விரசமுமின்றி படமாக்கி இருப்பது
-நாயகன் என்றால் சன்டையிட்டு ஊர் மக்களை காப்பாற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஆண்டான்டு கால தமிழ் சினிமாவை பின்பற்றாதது.
-மறந்து போன பல கிராமிய சம்பிரதாயங்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்தியது.
-கதையின் முக்கியம் கருதி எந்த ஒரு கமெர்சியல் விசயத்தையும் சேர்க்காதது.
-கதைக்கு ஏற்ப அந்த கால விசயங்களை பயன்படுத்தியது.(நீர் இறைக்கும் கவலை,தியேட்டரில் வெள்ளந்தி ரசிகர்,ரேடியோ)

பாரட்டப்பட வேண்டிய மற்ற மூன்று பேர்கள்:
இசை-ஜிப்ரன்:புதுமுக இசையமைப்பாளர் என்ற எண்ணமே வரவில்லை.பிண்ணனி இசையிலும், பாடல்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்."சர சர சாரக்காத்து", "செங்க சூளைக்காரா" ஏற்கனவே ஹிட் லிஸ்டில் வந்து விட்டது.

ஒளிப்பதிவு-ஓம்பிரகாஷ்:பீரியட் படத்திற்குரிய ஃபீலை படம் நெடுக கொண்டு வந்து விடுகிறார்.அதுவும் அந்த குருவிக்காரர் சாகும் சீனில் வைத்த ஷாட் மிக அருமை.

ஆர்ட் டைரக்டர்: ஒரு செங்கல் சூலை கிராமத்தை தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்துகிறார்.இவரது உழைப்புக்கு கண்டிப்பாக ஒரு விருது கிடைக்க வேண்டும்.

நான் ரசித்த காட்சி:
தாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்த உடன் சூலையில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி தன் மகளின் கையில் உள்ள களிமண்ணை கழுவி விட்டு நேராக நாயகனிடம் கூட்டிச் சென்று "ஏதவது என் பொண்ணுக்கு சொல்லிக் கொடுங்க" என்று சொல்லும் காட்சி.

மைனஸ்:
இந்த மாதிரி படங்களில் குறை இருந்தலும் அதை சொல்ல மனம் ஒப்பவில்லை.
இந்த படத்தில் நான் கண்ட ஒரே குறை, படம் முழுவதும் ஒரே இடத்தில் எடுத்திருப்பதால் ஒரு வித அலுப்பும், மெதுவாக செல்கிறது என்ற எண்ணமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.லகான் ஹிந்தி படம் பார்த்த போதும் இந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது.அதில் கிரிக்கெட் என்ற மாயை ஏற்படுத்திய ஈடுபாடு இந்த படத்தில் கல்வி எனும் நிஜம் ஏற்படுத்தாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல சமூக கருத்தை முன் நிறுத்தி இருப்பதால் கண்டிப்பாக வாகை சூடி வரவேற்க வேண்டிய ஒரு இயக்குனர் தான் A சற்குனம்.

4 comments:

  1. super nannna sonaale ponga :)

    ReplyDelete
  2. wow.. super nanba... vimarsanam nalla erukku...

    Waiting for more posts from you... :-)

    ReplyDelete
  3. Athan ,, paddamae oodala nu Hero vae oothukittare.. Innuma intha vilambaram.

    ReplyDelete
  4. @Murali: Nalla visayangal than enrume namakku pidikkathe!!!

    ReplyDelete