தினமும் நாம் ஓட்ஸை சாப்பிடுவதை விட நம்ம பாரம்பரிய உணவான இதை முயற்சி செய்து பார்க்கலாமே.
தேவையான பொருட்கள் :
கம்பு அரிசி மாவு - 150 கிராம்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிது
உளுந்து - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 5 (நறுக்கியது )
தக்காளி - 2 (நறுக்கியது )
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1 கொத்து (நறுக்கியது )
செய்முறை :
கம்பு அரிசி மாவுடன் சீரகம், சிறிது உப்பு சேர்த்து, நீர் தெளித்து, புட்டு மாவு பதத்துக்குப் பிசைந்து ஐந்து நிமிடங்களுக்கு ஊறவிடவும். பிறகு, 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக விடவும் .
எண்ணையைச் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து , கடலைப் பருப்பு , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் . பிறகு வேகவைத்த புட்டை இத்துடன் கலந்து வதக்கவும் . கொத்தமல்லி இலை தூவி , சூடாகப் பரிமாறினால் சுவையாக இருக்கும் .
பலன்கள் :
இந்தப் புட்டில் நிறைந்திருக்கும் புரதம், இரும்புச்சத்துக்கள் குழந்தைகளுக்கு நல்லது .

No comments:
Post a Comment