இன்று எல்லோராலும் காலத்தால் அழியாத படம் மற்றும் Trend Setter என கொண்டாடப்படும் 16 வயதினிலே திரைப்படத்தை யாரும் வாங்க முன் வராத நிலையில் அந்த படத்தை தைரியமாக வாங்கி விநியோகம் செய்தவர் ராஜ்கிரண்.
Friday, May 29, 2015
Sunday, May 17, 2015
என்னம்மா இப்படி பண்றிங்களம்மா: விளம்பர அக்கப்போர்
- பிரபு, விக்ரம் பிரபு & அமிதாப் தொல்லை ஒரு வழியா முடிஞ்சுதுன்னு பார்த்தா, மறுபடி பிரபுவோட solo performance தாங்க முடியல.அட கனவுல கூட கல்யாண் ஜுவல்லர்ஸ் Ad தாங்க வருது
- என்னை (ஏ )மாற்றிய சென்னை அமிர்தா - டேய் ராகவா நீ ஒரு புரோட்டா மாஸ்டர் ங்கிறது எனக்கு மட்டும் தானடா தெரியும்.
- இவங்களை எல்லாம் விட்ட புதுசா ஒருத்தன் SAMS கப்பல் காலேஜ்னு. சம்பளம் வருடம் 60 லட்சமாம். வேலை என்னவா இருக்கும். கப்பல் நடுவுல நின்றுச்சுன்னா நம்மல இறங்கி தள்ள சொல்வாங்களோ ?
பாரம்பரிய வைத்தியம் - கால் ஆணி :
உங்கள் கால் பாதத்தில் ஆணி இருக்கிறதா? கவலையை விடுங்கள்.
உங்கள் பாதத்தை சுடு நீர் கொண்டு நன்றாக கழுவி விட்டு வெள்ளை பூண்டை
நசுக்கி ஆணி இருக்கும் இடத்தில் வைத்து கட்டவும் . பிறகு 2-3 மணி நேரம் கழித்து கட்டை அவிழ்த்து விட்டு கழுவி விடவும்.
இதை தொடர்ந்து 4-5 நாட்கள் செய்து வந்தால் கால் ஆணி மறைந்து விடும் .
நம் பாரம்பரிய உணவு - கம்பு காரப் புட்டு
தினமும் நாம் ஓட்ஸை சாப்பிடுவதை விட நம்ம பாரம்பரிய உணவான இதை முயற்சி செய்து பார்க்கலாமே.
தேவையான பொருட்கள் :
கம்பு அரிசி மாவு - 150 கிராம்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிது
உளுந்து - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 5 (நறுக்கியது )
தக்காளி - 2 (நறுக்கியது )
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1 கொத்து (நறுக்கியது )
செய்முறை :
கம்பு அரிசி மாவுடன் சீரகம், சிறிது உப்பு சேர்த்து, நீர் தெளித்து, புட்டு மாவு பதத்துக்குப் பிசைந்து ஐந்து நிமிடங்களுக்கு ஊறவிடவும். பிறகு, 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக விடவும் .
எண்ணையைச் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து , கடலைப் பருப்பு , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் . பிறகு வேகவைத்த புட்டை இத்துடன் கலந்து வதக்கவும் . கொத்தமல்லி இலை தூவி , சூடாகப் பரிமாறினால் சுவையாக இருக்கும் .
பலன்கள் :
இந்தப் புட்டில் நிறைந்திருக்கும் புரதம், இரும்புச்சத்துக்கள் குழந்தைகளுக்கு நல்லது .

Subscribe to:
Posts (Atom)