Tuesday, April 24, 2012

ஊத்திக் கொடுக்கும் அரசாங்கமும் ஊரைக் கெடுக்கும் குடிமகன்களும்

குளிரின் தாக்கத்தால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக்க வெள்ளைக்காரன் குடிக்க ஆரம்பித்து அதை நம் மக்களுக்கும் கத்துக் கொடுத்துட்டு போயிட்டான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா அது,
1) உடல் அலுப்பு தீரவும்
2) மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும்
3) சோகத்தை அனுசரிக்கவும்
4) கோபத்தை அதிகப்படுத்தவும்
5)
இப்போ கொளுத்துற வெயில்லயும் நம்ம ஆளுங்க பாலக் கட்டைக்கு கட்டை குடிச்சிட்டு தானும் கெட்டு தன் குடும்பத்தையும் கெடுக்குறதுக்கு இந்த திராவிட கட்சிகளின் பங்கு இருக்கே...அட அட....

Monday, April 9, 2012

விவசாயம்...what you mean by விவசாயம்


ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாக ஆசைப்படுகிறான்.
நடிகரின்/நடிகையின் வாரிசு நடிகனாக/நடிகையாக/டைரக்டராக ஆசைப்படுகிறார்கள்.
டாக்டரின் வாரிசு டாக்டராக ஆசைப்படுகிறான்.
கிரிக்கெட் வீரரின் மகன் பேட்ஸ்மேனாக ஆசைப்படுகிறான்.

மேலே சொன்ன எந்த ஒரு ஆசையும் அவர்களது பெற்றோர்களால் நிராகரிக்கப்படுவதில்லை.

ஆனால் எந்த ஒரு விவசாயின் மகனும் விவசாயியாக விரும்புவதில்லை.அப்படி விரும்பினாலும் அவர்களது பெற்றோரால் ஆதரிக்கப்படுவதில்லை."நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம் நீயாவது இந்த நிலத்துல கஷ்டப்பட வேண்டாம்" என்று விவசாயத்தின் மேல் வெறுப்பான ஆதங்கம் வைக்கப்படுகிறது.

ஒரு மனிதன் வாழத் தேவையான உணவு உற்பத்தி துறை விவசாயத்தின் மேல் விருப்பம் இல்லாமல் ஆடம்பர துறைகளை தேர்வு செய்ய தூண்டுதலாக இருக்கும் காரணிகள் என்ன என்ன.....

- ஒரு பொருளை தயாரித்தவன் அதன் விளையை நிர்ணயிக்க முடியாத நிலை விவசாயத்தில் மட்டும் தான் உண்டு.

- கிரிக்கெட்- "மேன் ஆப் தி மேட்ச்"/சினிமா - "தேசிய விருது/மாநில விருது/டாக்டர் பட்டம்",அரசியல் - "பல தரப்பட்ட பட்டங்கள்" என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சிறப்பிக்கும் அரசாங்கம் எந்த ஒரு விவசாயியையும் இதுவரைக்கும் கவுரவித்ததில்லை.

- எந்த ஒரு துறையிலும் 58 வயசுக்கு பிறகு ஓய்வும், ஓய்வுக்குப் பின் ஓய்வூதியமும் வழங்கப்படும்(இன்னும் ஒருபடி மேல் VRS என்று வேலையே செய்யாமல் ஊதியம் பெறுவது).ஆனால் விவசாயி மட்டும் தான் ஓய்வில்லாமல் உயிர் போகும் வரை உழைக்கும் ஒரு ஜீவன்.விவசாயம் பொய்த்தாலும் உயிரை விடுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாதவன்.

- அந்நிய நாட்டுக்காரனின் தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி பால் வார்க்கும் அரசாங்கம், நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்திற்கு 3 மணி நேரம் மின்சாரம் வழங்கி விவசாயியின் வயிற்றில் அடிக்கிறது.

- சரியான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் எல்லா விவசாயிகளும் இடைத் தரகர்களால் ஏமாற்றப்படுவது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பம் அவசியம் தான்.ஆனால் வாழ உணவு ரொம்ப முக்கியம்.ஒரு கட்டத்துல சாப்பிட சோறு இல்லாமல் எல்லாம் செல்போன்/லேப்டாப் இதை எல்லாம் தான் திங்கனும்.இப்பவும் கிராமத்துல கொஞ்ச பேர் கவுரத்துக்காக தான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.அரசாங்கம்/மக்களின் கூட்டு முயற்சியால் தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.அரசாங்கமும்/நாமும் இன்னும் காலம் தாழ்த்தினால் நமது வாரிசுகள் விவசாயத்தை மட்டும் அல்ல...சாப்பாட்டையும் மறந்திட வேண்டியது தான்.

Sunday, January 8, 2012

2011 - ல் நான் ரசித்த பாடல்கள்

1) யாத்தே யாத்தே - ஆடுகளம்
2) அய்யய்யோ நெஞ்சு அலையுதடி - ஆடுகளம்
3) சர சர சாரக் காத்து - வாகை சூட வா
4) கலா சலா - ஒஸ்தி
5) நங்கை நிலாவின் தங்கை - எங்கேயும் காதல்
6) சொட்ட சொட்ட நனைய வைத்தாய் - எங்கேயும் எப்போதும்
7) என்னமோ ஏதோ - கோ
8) கன்னித்தீவு பொன்னா - யுத்தம் செய்
9) லோலிட்டா - எங்கேயும் காதல்
10) மங்காத்தா தீம் மியுசிக் - மங்காத்தா

Wednesday, January 4, 2012

எனக்கு பிடித்த முதல் பத்து தமிழ் திரைப்படங்கள்

10) சாமி




ஒரு கமர்சியல் படம்னா இப்படிதான் இருக்கனும்னு சொல்லி அடித்த படம். தமிழ் சினிமாவின் பாரம்பரிய போலிஸ் படங்களிலிருந்து மாறுபட்டு வந்த ஒரு போலிஸ் படம்.எவ்வளவோ நாயகர்கள் காக்கி உடை அணிந்திருந்தாலும் நடை/உடை/குரல் என எல்லாவற்றிலும் என்னை அசத்தியது இந்த சாமிதான்.

9) காதலுக்கு மரியாதை



படத்தின் பெயருக்கேற்றார் போல் உண்மையாகவே காதலுக்கு மரியாதை தந்த படம்.நாயகன் மற்றும் நாயகியை நேரில் சந்திக்க வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் காட்சி அமைத்த ஒரு படம் என்றால் அது இந்த படம் தான்.தமிழ் சினிமாவின் சிறந்த கிளைமாக்ஸ் உள்ள படங்களில் இதுவும் ஒன்று.இந்த படம் வெளியான நேரத்தில் பல ஆண்கள் தங்கள் பர்ஸில் ஷாலினி போட்டோவும், பெண்கள் விஜய் போட்டோவும் வைத்துக் கொண்டு திரிந்தார்கள்.

8) கோகுலத்தில் சீதை



கார்த்திக் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது "மௌன ராகம் - மனோகர்" கேரக்டர் தான்.என்னைப் பொருத்தவரை கார்த்திக் என்ற நடிகன் தன் முழு ஆளுமையையும் காட்டியது இந்த படத்தில் தான்.தமிழ் சினிமா இழந்த நல்ல ஒரு படைப்பாளிகளில் இந்த படத்தை இயக்கிய அகத்தியனும் ஒருவர்.

7) ஆடுகளம்



ஒரு படத்திற்கு நடிகர்/நடிகை தேர்வு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.பேட்டைக்காரன் கேரக்டருக்கு பிரபு/நாசர்/பிரகாஷ் ராஜ் என்று எவரேனும் தெரிந்த முகத்தை தேர்வு செய்திருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்திருக்க முடியாது.தாப்ஸிக்கு பதில் முதலில் தேர்வு செய்யப் பட்டவர் த்ரிஷா.த்ரிஷாவும் "ஐரின்" ரோலுக்கு அவ்வளவாக பொருந்தி இருக்க மாட்டார். இந்தியாவிலேயே இளம் வயதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியவர் என்ற பெருமையை தனுஷிற்கு பெற்றுத் தந்த படம்.

6) சேது



தமிழ் சினிமாவில் மனதை உலுக்கிய கிளைமாக்ஸ் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று.எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.இந்த படத்தின் மூலம் தான் பாலா, விக்ரமின் வாழ்க்கை புத்தகத்தை அதன் நடுப்பக்கத்தில் இருந்து எழுதினார்.

5) முள்ளும் மலரும்



ரஜினியின் நடிப்பு வாழ்க்கையை "முரட்டுக்காளை" க்கு முன்/பின் என்று வகைப் படுத்தலாம்.முள்ளும் மலரும் முரட்டுக்காளைக்கு முன் வந்த படம்.ரஜினி ஒரு பேட்டியில் தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் முள்ளும் மலரும் என்று சொன்ன பிறகு தான் இந்த படத்தை பார்த்தேன்.இதை பார்த்த உடன் எனக்கு மட்டுமல்ல எல்லார் மனதிலும் தோன்றும் ஒரு கோபம் "அடப்பாவி காளையா (முரட்டுக்காளை பாத்திரம் பெயர்) அநியாயமாக காளியை (முள்ளும் மலரும் பாத்திரம் பெயர்) கொன்னுட்டியடா".

4) பருத்தி வீரன்



கார்த்திக் - சிவாஜிக்கு அடுத்து அறிமுக படத்திலேயே சிறந்த நடிப்பு, ப்ரியாமணி - தேசிய விருது& அமீர் - சிறந்த இயக்குனர் என்று பலருக்கு நல்ல பெயரினை பெற்றுத் தந்தாலும் இந்த படத்தில் அனைவராலும் மறக்கப் பட்ட ஒரு கலைஞன், நம்ம சித்தப்பு செவ்வாழை.ஹலோ அமீர், அரசியல் பண்ண ஆயிரம் பேர் இருக்காங்க...வாங்க பாஸ் வந்து இந்த மாதிரி நல்ல படமா கொடுங்க.

3) முதல் மரியாதை


நடிகர் திலகமும், இயக்குனர் இமயமும் இதற்கு முன் பல வெற்றிப் படங்களை தந்திருந்தாலும் இருவருக்கும் ஒரு மைல் கல்லாக அமைந்த படம்.அறிமுகமான காலத்தில் கலக்கிய சிவாஜி பிறகு ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று அனைவராலும் விமர்சிக்கப் பட்டார்.அந்த விமர்சனத்தை எல்லாம் தூள் தூளாக நொறுக்கிய படம்.கள்ளக் காதல் போன்றதொரு கதையை மிகவும் சிறப்பாக கையான்டிருப்பது தான் இயக்குனரின் வெற்றி.


2) தேவர் மகன்




கமலின் "நாயகன்" படத்தை பார்த்த பிறகு சிவாஜி கமலிடம் "நான் நடித்த காலத்தில் இந்த மாதிரி திறமை மிகுந்த டைரக்டர்கள் குறைவு டா. அந்த விதத்தில் நீ ஒரு அதிர்ஷ்டசாலி" என்று சொன்னாராம்.இதை மனதில் வைத்தோ என்னவோ சிவாஜிக்கு சிறப்பான ஒரு பாத்திரத்தை வழங்கி இருப்பார்.கமல் ஒரு நடிகன்/டைரக்டர்/டான்ஸர்/பாடகர் என்பதை எல்லாம் தாண்டி வசனகர்த்தாவாக மிலிர்ந்த படம்.நாசரின் நடிப்பும் இந்த படத்தில் சிறப்பாக அமைந்தது.இளையாராஜாவின் இசைக்கு இந்த படத்திற்கு தேசிய விருது ஒரு ஓட்டில் நழுவி ரகுமானுக்கு அது முதல் விருதாக அமைந்தது.அந்த ஒரு ஓட்டை ரகுமானுக்கு போட்டவர் பாலு மஹேந்திரா .

1) நாயகன்



Master piece of Ilayaraj
Master piece of Kamalhasan
Master piece of Manirathnam
of course Master piece of "Tamil Cinema"/"Indian Cinema"

No more words.

Monday, January 2, 2012

2011-ல் நான் ரசித்த முதல் பத்து படங்கள்

1)ஆடுகளம்
2)வாகை சூட வா
3)எங்கேயும் எப்போதும்
4)யுத்தம் செய்
5)மௌன குரு
6)கோ
7)போராளி
8)தெய்வத்திருமகள்
9)காஞ்சனா
10)ஆரண்ய காண்டம்